திருமண நாளில் நேர்ந்த ஏமாற்றம்: கவலைப்படாமல் கொண்டாடிய யுவராஜ் சிங்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், ரஞ்சிக் கிண்ண போட்டியில் தனது மோசமான ஆட்டம் திருமண நாள் கொண்டாட்டத்தை பாதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

2018-19 ஆண்டுக்கான ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில், யுவராஜ் சிங் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.

கடந்த நவம்பர் 28ஆம் திகதி பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆனால், யுவராஜ் சிங்கின் ஆட்டம் மோசமானதாக இருந்தது. அதாவது தான் எதிர்கொண்ட 28வது பந்தில் தான் யுவ்ராஜ் சிங் முதல் ரன்னை எடுத்தார். பின்னர் தொடர்ந்து ஆடிய அவர், 88 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆனார்.

யுவராஜின் இந்த ஆட்டம் விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், தனது இரண்டாம் ஆண்டு திருமண நாளை யுவராஜ் சிங் கொண்டாடியுள்ளார். தனது மனைவி ஹேசல் கீச் உடன் இருக்கும் புகைப்படத்தை, யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் வாழ்வின் சிறந்த மற்றும் மோசமான என அனைத்து தருணங்களிலும் தனது மனைவி துணை நிற்பதாகவும், இந்த பந்தம் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டு தனது மனைவிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் டெல்லி அணிக்கு எதிரான மோசமான ஆட்டம், தனது இரண்டாம் ஆண்டு திருமண நாள் கொண்டாட்டத்தை பாதிக்கவில்லை என்பதை யுவ்ராஜ் சிங் குறிப்பிட்டுள்ளார்.

36 வயதாகும் யுவராஜ் சிங் 304 ஒருநாள் போட்டிகளிலும், 40 டெஸ்ட் மற்றும் 58 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers