டோனியின் பயிற்சி ஆட்டத்தை காண வந்த 87 வயது பெண் ரசிகை! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலியாவில் டோனி பயிற்சி எடுப்பதை காண 87 வயது மூதாட்டி ஒருவர் வந்த உணர்வுப்பூர்வமான சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி பங்குபெறும் ஒருநாள் கிரிக்கெட் தொடர், அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தொடங்க உள்ளது.

இதற்காக டோனி அவுஸ்திரேலியாவுக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டோனி பயிற்சி செய்வதை காண எடித் நார்மன் என்ற 87 வயது மூதாட்டி வந்துள்ளார்.

இதனை அறிந்த டோனி பயிற்சி முடிந்ததும் அந்த பெண்மணியுடம் ஒன்றாக அமர்ந்து சிரித்து பேசினார். இந்த வீடியோ டோனியின் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்