டோனி என்னை மச்சி என அழைப்பார்! டீ வில்லியர்ஸ் பாராட்டுவார்... அசத்தும் இந்த தமிழர் யார்?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் ஓரத்தில் இருக்கும் நடைபாதையில் கை கிளவுஸ், ஷூ தைத்துக் கொண்டிருக்கும் நபருக்கு டோனி, கோஹ்லி, சச்சின் போன்ற கிரிக்கெட் வீரர்கள் மிகவும் பரிட்சயமானவர்களாக உள்ளார்கள் என தெரியவந்துள்ளது.

பாஸ்கரன் என்ற நபர் தான் சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் அதிகாரபூர்வ காப்லராக கடந்த 28 ஆண்டுகளாக உள்ளார்.

ஆரம்பத்தில் அப்பா செய்த பழ வியாபாரத்தைப் பார்த்து வந்துள்ளார். பின்னர், மாமா செய்த காப்லர் தொழிலை எடுத்துச் செய்து வருகிறார்.

இது குறித்து பாஸ்கரன் கூறுகையில், மாமாவிடம் தொழிலைக்கற்று கடைபோட்ட பின், என்னுடைய தொழில் இனி இதுதான் என்று முடிவு செய்தேன்.

ஷூ, கிளவுஸ் தைப்பது, பேட் ஸ்டிக்கர் ரிமூவ் செய்வது, ஹெல்மட் சரி செய்வது போன்ற வேலைகள் செய்வேன்.

1993-ம் ஆண்டு நடந்த இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டியில் தொடங்கி இன்று வரை ஸ்டேடியத்தின் அஃபீஸியல் காப்லர் நான் தான்.

கிரிக்கெட் நடக்கும்போது எனக்கு வி.ஐ.பி பாஸ் குடுப்பாங்க. நான் வீரர்கள் இருக்குற இடத்துக்கு பக்கத்துல உட்கார்ந்திருப்பேன்.

வீரர்களுக்கு அவசரமா ஷூ தைக்கனும்னா தைச்சு கொடுப்பேன். கிறிஸ் கெய்ல், ஏ.பி.டி வில்லியர்ஸ், வார்னே, வாட்சன் என இன்டர்நேஷனல்ல இருந்து உள்ளூர் பிளேயர்ஸ் வரை எல்லாருக்கும் தைச்சு கொடுத்திருக்கேன்.

அவங்களும் நல்லா இருக்குனு பாராட்டி இருக்காங்க.

டோனி வந்த உடனே ஹாய் மச்சி... ஹௌ ஆர் யு?'னு கேப்பாரு. நானும் 'ஃபைன்'னு சொல்லி சிரிச்சிட்டு வேலையைப் பார்ப்பேன்.

டோனி, ரெய்னா, சச்சின், விராட் கோஹ்லி எல்லாம் நல்ல க்ளோஸ். எல்லாரும் நல்ல ஜாலி டைப். வார்னர், வாட்சன்லாம் நல்ல டைப்.

எனக்கு டோனியை தான் ரொம்பப் பிடிக்கும். சச்சின் அதிகமா பேசமாட்டாரு. வேலை செய்யும்போது அட்வைஸ் பண்ணுவாரு. ஆனா, எல்லாரும் செம ஜாலியாக இருப்பாங்க. மரியாதையாக பேசுவார்கள் என கூறுகிறார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்