பிரபல இந்திய கிரிக்கெட் வீரரின் குடும்பத்தில் நிகழும் பெரும் குழப்பம்!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரவீந்திர ஜடேஜாவின் சகோதரி மற்றும் தந்தை, திடீரென காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரும், சென்னை அணியின் நட்சத்திர வீரருமான ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரியா கடந்த மாதம் 3-ம் திகதியன்று தன்னை பாஜக கட்சியில் இணைத்து கொண்டார்.

இந்த நிலையில் அதற்கு அப்படியே எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியில், ஜடேஜாவின் மூத்த சகோதரி நைனாப மற்றும் தந்தை அனிருத்தசிங் ஆகியோர், ஜாம்நகரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி கூட்டத்தின் போது தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில், சமீபத்தில் தன்னை கட்சியில் இணைத்துக்கொண்ட படேலும் உடன் இருந்தார். முன்னாள் மருத்துவ உதவியாளரான நைனாபவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers