நீங்கெல்லாம் எதுக்கு கிரிக்கெட் விளையாடுறீங்க? பாகிஸ்தான் வீரர்களை விளாசும் சொந்த நாட்டு ரசிகர்கள்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணியை, அந்நாட்டு ரசிகர்கள் மோசமாக விமர்சித்து வருகின்றனர்.

மான்செஸ்டரில் நேற்று நடந்த இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கடந்த 6 முறை உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான், இம்முறை வெற்றி பெறும் என்று எதிர்பார்த்த அந்நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் தங்கள் நாட்டு அணியினர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனை வெளிக்காட்டும் விதமாக ட்விட்டரில் தங்களது கருத்துக்களையும், பாகிஸ்தான் வீரர்களின் செயல்பாடு குறித்து வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

அவற்றில் தொப்பையுடன் கூடிய உடல்வாகு, களத்தில் வேகமாக ஓடமுடியாத நிலையில், அணித்தலைவர் உடற்தகுதியை வைத்துள்ளார் என்று கோபமாக கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சிலர், இந்தியாவுக்கு எதிரான போட்டிக்கு முந்தைய நாள் இரவு, பாகிஸ்தான் வீரர்கள் ஹொட்டலுக்கு சென்று பீட்ஸா, பர்கர் சாப்பிட்டதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளனர்.

பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் ‘பாகிஸ்தான் வீரர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு பதிலாக மல்யுத்தம் விளையாட செல்லலாம். அவர்களின் உடல்தகுதியைப் பாருங்கள்.

நாங்கள் பாகிஸ்தான் வீரர்கள் மீது ஏராளமான நம்பிக்கையும், ஆசையும் வைத்திருந்தோம். ஆனால், அவர்களோ பீட்ஸா, பர்கர் மீது தான் ஆசை வைத்திருந்தார்கள்’ என தெரிவித்துள்ளார்.

மற்றொரு ரசிகர், ‘இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன் இரவு விருந்தில், அதிகாலை 2 மணிவரை பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். அதில் அணித்தலைவர் சர்பிராஸ் அகமது 4 பர்கர் சாப்பிட்டுள்ளார். தோல்விக்கு காரணம் பர்கர் தான்’ என வேடிக்கையாக ட்வீட் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers