42 ஆண்டுகளுக்கு பின் தங்கம் வென்று சாதித்த சிந்து.. பி.டி.உஷா - ஜெகன்மோகன் ரெட்டி வாழ்த்து மழை!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரில் தங்கம் வென்று சாதித்த பி.வி.சிந்துவுக்கு, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, பி.டி.உஷா ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில், இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஜப்பானின் நோசோமி ஒகுஹராவை வீழ்த்தி வெற்றிவாகை சூடினார்.

இதன்மூலம், உலக சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை, 42 ஆண்டுகளுக்கு பின்னர் படைத்துள்ளார் சிந்து.

இதனைத் தொடர்ந்து தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு இந்திய பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா கூறுகையில், ‘விளையாட்டில் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு உணர்வு இருக்கும்போது, அது நல்ல பலனையே தரும். சிந்துவின் இந்த வெற்றி வருங்கால வீரர், வீராங்கனைகளை ஊக்குவிப்பதாக அமையும். பி.வி.சிந்துவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்.

இதேபோல் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியும் தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி. இந்த இறுதிப் போட்டியின் தொடக்கம் முதலே சிந்து ஆதிக்கம் செலுத்தி வந்தார். இறுதியில் ஒரு சாம்பியனை போல விளையாடி, உண்மையான சாம்பியனாகவே பட்டத்தை வென்றார்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்