எங்களுக்கு அமைதி வேண்டும்! கோத்தபாயவிடம் இலங்கை கிரிக்கெட் அணியின் தமிழ் வீரர் உருக்கம்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

எங்களுக்கு அமைதி மற்றும் வளர்ச்சி தான் வேண்டும் எனவும் அதை நீங்கள் கொடுப்பீர்கள் என நம்புவதாகவும் கோத்தபாயவுக்கு தனது டுவிட்டர் பதிவின் மூலம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த தமிழ் வீரரான அர்னால்ட் தனது டுவிட்டர் பதிவில், கோத்தபாயவுக்கு வாழ்த்துக்கள்.

ஒற்றுமை, அமைதி, வளர்ச்சி இது தான் நாம் எல்லோரும் தேவைப்படுகிறது, அதை நோக்கி நீங்கள் எங்களை கொண்டு செல்வீர்கள் என நம்புகிறோம்.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை கோத்தபாயவுடன் சேர்ந்து நாமல் டுவிட்டர் ஐடிக்கும் அர்னால்டு டேக் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்