அவுஸ்திரேலியாவின் காட்டுத் தீ-க்கு நிதி திரட்ட ஷேன் வார்னே தனது தொப்பியை ஏலம் விட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் காட்டுத் தீக்கு பலரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே தான டெஸ்ட் போட்டியில் விளையாடியபோது அணிந்திருந்த தொப்பியை ஏலம் விட்டுள்ளார்.
வார்னே-வின் தொப்பியை வாங்க ஆன்-லைன் மூலம் பலரும் போட்டி போட்டுள்ளனர். இதனால், அவருடைய தொப்பி வரலாறு காணாத உச்ச விலைக்கு ஏலம் போய்யுள்ளது.
இறுதியில், 1மில்லியன் டொலர் அளவிற்கு அந்த தொப்பி ஏலம் போய்யுள்ளது.
கிரிக்கெட் வீரர் ஒருவர் பயன்படுத்திய பொருள் ஏலம் விடப்பட்டத்தில் அதிக விலைக்கு போனதில் இதுவே பெரிய சாதனையாகும்.
இதற்கு முன், அவுஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் டெஸ்ட் போட்டியில் உபயோகப்படுத்திய தொப்பி இந்திய மதிப்பில் 3கோடிக்கு ஏலம் போனதே அதிகப்பட்ச சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்