விராட் கோஹ்லி மனைவி அனுஷ்கா கர்ப்பம்! முதல் குழந்தை பிறக்கப்போகும் மாதம் குறித்து மகிழ்ச்சியோடு அறிவிப்பு

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்
717Shares

விராட் கோஹ்லி மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாகவும் அடுத்தாண்டு ஜனவரியில் முதல் குழந்தையை எதிர்ப்பார்ப்பதாகவும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இருவருக்கும் இத்தாலியில் பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருப்பதாக கோஹ்லி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், நாங்கள் மூன்று பேர் ஆக போகிறோம். 2021 ஜனவரியில் குழந்தை பிறக்கவுள்ளது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து விராட் கோஹ்லி - அனுஷ்கா தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்