மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் நாய்கள்: எப்படி தெரியுமா?

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்
384Shares
384Shares
ibctamil.com

நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருபவர்கள் நீண்ட காலம் உயிர்வாழ முடியும் என புதிய ஆய்வு ஒன்றின் ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வை ஸ்வீடன் நாட்டு ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது 3.4 மில்லியனிற்கும் அதிகமாக ஸ்வீடன் நாட்டு மக்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

நாய்களை செல்லப் பிராணிகளாக வளர்த்து வருபவர்கள் 12 வருட காலப் பகுதிக்கு மேலாக எந்தவொரு இருதய நோய்த் தாக்கங்களுக்கும் உட்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

நாய்கள் தமது எஜமான் அல்லது எஜமானிகளின் இறப்பிற்கான சாத்தியத்தினை 20 சதவீதத்தினால் குறைக்கின்றது எனவும் நாயுடன் தனியாக வசிப்பவர்களில் 33 சதவீதத்தினால் மரணத்திற்கான வாய்ப்பு குறைக்கப்படுகின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தவிர இருதய நோய்கள் 8 சதவீதத்தினால் குறைவடைகின்றன எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

நாய்களை செல்லப் பிராணிகளாக வைத்திருப்பவர்கள் அவற்றிற்கு பல்வேறு பயிற்சிகளை வழங்கும் நேரம் உட்பட வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உடல் ரீதியாக உழைக்கின்றனர்.

இதன் காரணமாகவே அவர்கள் ஆரோக்கியம் பெற்று நீண்ட ஆயுளைப் பெறமுடிகின்றது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்