சமூகவலைத்தளங்கள் உட்பட ஏனைய வலைச் சேவைகளிலும் கணக்கினை வைத்திருக்கும் பயனர்களின் நிலை கேள்விக்கு உள்ளாகி வருகின்றது.
பயனர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்படுவதே இதற்கு காரணமாகும்.
இப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு மைக்ரோசொப்ட் நிறுவனமானது தனது பயனர்களின் தகவல்களை பாதுகாக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன்படி பயனர்கள் தமது தகவல்களை வலுவாக பாதுகாக்கக்கூடிய கட்டுப்பாட்டு முறைகளை அறிமுகம் செய்யவுள்ளது.
இவ் வசதியானது தற்போது பரிசோதனை மட்டத்தில் காணப்படுகின்றது, மேலும் இத் திட்டத்திற்கு Bali எனவும் பெயரிடப்பட்டுள்ளது.
பரிசோதனை வெற்றியளிக்கும் பட்சத்தில் விரைவில் பயனர்களின் பயன்பாட்டிற்கு குறித்த வசதி அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.