பேஸ்புக் மெசஞ்சர் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு

Report Print Givitharan Givitharan in ஏனைய தொழிநுட்பம்

பேஸ்புக் நிறுவனம் குறுஞ்செய்திகளை அனுப்பவும், வீடியோ மற்றும் ஆடியோ வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளவும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே.

இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக மேற்கொள்ளப்படும் ஆடியோ உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தற்போது அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களே இவ்வாறு உரையாடல்களை ஒட்டுக்கேட்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான பேஸ்புக் ஊழியர்கள் இந்த அநாகரிக வேலையில் ஈடுபடுவதை பேஸ்புக் நிறுவனம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் கூகுள், ஆப்பிள், மைக்ரோசொப்ட் மற்றும் அமேஷான் நிறுவனங்களிலும் இவ்வாறான அநாகரிக வேலைகள் இடம்பெறுவதாக தகவல் வெளியாகிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்