மாரடைப்பிற்கு காரணமானதும், மூளைக் காயங்களை ஏற்படுத்தக்கூடியதுமான பக்டீரியா கண்டுபிடிப்பு

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

மூளையில் ஏற்படக்கூடிய காயங்களை அதிகரிக்கச் செய்யக்கூடியதும், அதேவேளை மாரடைப்பினை ஏற்படுத்தக்கூடியதுமான பக்டீரியா ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Bacteroides fragilis எனும் இனத்தைச் சேர்ந்த பக்டீரியாவே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடலில் அதிகமாக காணப்படக்கூடிய இந்த பக்டீரியாவானது இரத்த நாளங்களிலும் வாழக்கூடியது.

இவ்வாறு இரத்த நாளங்களில் அதிகளவில் இனம்பெருகுவதனால் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்புக்கு வழிவகுக்கின்றது.

அதுமட்டுமல்லாது மூளையில் காயங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பினை அதிகரிக்கச் செய்வதாகவும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பென்சில்வேனியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments