பூமியில் பூக்கள் தோன்ற முன்னரே தோற்றம் பெற்ற வண்ணத்துப் பூச்சிகள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
62Shares
62Shares
ibctamil.com

ஜேர்மனியில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள வண்ணத்துப் பூச்சிகள் மற்றும் அந்துப் பூச்சிகளின் படிமங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.

இதன்போது அவை சுமார் 200 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி பார்க்கையில் முன்னர் எண்ணியதை விடவும் சுமார் 70 மில்லியன் வருடங்கள் பழமைவாய்ந்தவையாக வண்ணத்துப் பூச்சிகள் இருக்கின்றன.

முன்னர் பூக்களும், வண்ணத்துப் பூச்சிகளும் ஒரே காலப் பகுதியில் தான் தோற்றம் பெற்றதாக கருதப்பட்டது.

ஆனால் தற்போது பூக்கள் வண்ணத்துப் பூச்சிகள் தோற்றம் பெற்று 70 மில்லியன் வருடங்களுக்கு பின்னரே தோற்றம் பெற்றதாக கருத வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே பூக்களின் தேன்களை உணவாக உட்கொள்ளும் வண்ணத்துப் பூச்சிகள் பூக்கள் தோற்றம் பெற முன்னர் எதை உணவாக கொண்டிருந்தன என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்