வீடுகளை தேடிவரும் சிலந்திகள்: வினோதமான காரணத்தை வெளியிட்ட ஆய்வாளர்கள்

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்
203Shares
203Shares
ibctamil.com

சிலந்திகள் மீது மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று அவை எதற்காக, எந்தெந்த நேரங்களில் நம் வீட்டைத்தேடி வருகின்றன என்பது தொடர்பான சுவாரஸ்யமான தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது.

நாம் காணும் பெரும்பாலான சிலந்திகள் ஆண் சிலந்திகள்.

இவை இனப்பெருக்கத்துக்காக பெண் சிலந்திகளைத்தேடி வருவதாக ஆய்வுகள் சொல்லுகின்றன.

பெண் சிலந்திகள் பொதுவாக யன்னல்களின் கீழ்ப்புறமாக அல்லது மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் இடங்களில் வலைகள் பின்னி வசிக்கின்றன.

இப் பெண்சிலந்திகளைத் தேடியே ஆண் சிலந்திகள் அலைந்துதிரிவதாக சொல்லப்படுகிறது.

இவற்றின் இனப்பெருக்கத்திற்கு குடிமனைகள் சௌகரியமாக இருப்பதால் அவை நமது வீட்டைத்தேடி வருகின்றன.

பெரும்பாலும் மாலைவேளைகளில் குறிப்பாக மாலை 6 மணி தொடக்கம் 9 மணிக்கிடைப்பட்ட நேரங்களில் இவற்றைக் காணமுடியும்.

இவ் ஆய்வுக்கென ஆய்வாளர்கள் 'Spider in da House' எனும் ஆப்பிளிக்கேசனை உருவாக்கி பொதுமக்களிடமிருந்து தரவுகளைச் சேகரித்து பகுப்பாய்வுசெய்திருந்தனர்.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்