பரம்பரை அலகில் மாற்றம் செய்யப்பட்டு பிறந்த குழந்தைகள்: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சீன விஞ்ஞானி

Report Print Givitharan Givitharan in விஞ்ஞானம்

உலகிலேயே முதன் முறையாக பரம்பரை அலகில் மாற்றம் செய்யப்பட்ட இரு குழந்தைகள் பிறந்துள்ளன.

சீனாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவரே இச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.

எனினும் இச் செயலானது மருத்துவ விதிமுறைகளை மீறும் செயல் என்பதால் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ் விசாரணைக்காக 40 அங்கத்துவர்களைக் கொண்ட சட்டத்தரணிகள் குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த இரட்டைக் குழந்தைகள் கருவில் இருக்கும்போதே CRISPR-Cas9 எனும் பரம்பரை அலகினை நீக்கி மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தின் ஊடாக இப் பரம்பரை அலகு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

HIV தொற்றுக்கு எதிர்ப்பை கொண்ட பரம்பரை அலகே புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஞ்ஞானம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers