மருத்துவமனையில் இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டதாக வெளியான சம்பவத்தில் அதிரடி திருப்பம்

Report Print Arbin Arbin in தெற்காசியா

பாகிஸ்தானில் சிகிச்சைக்கு சென்ற இளம்பெண் கற்பழித்து கொல்லப்பட்டதாக வெளியான சம்பவத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

குறித்த இளம்பெண் ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்துள்ளதாக அவரது உடற்கூறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கொராங்கி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த ஏப்ரல் 18 ஆம் திகதி அஸ்மாத் ஜுனேஜோவின் சடலம் அவரது தாயாரால் கண்டெடுக்கப்பட்டது.

பல்வலி காரணமாக 22 வயதான அஸ்மாத் சிகிச்சைக்கு சென்றுள்ளார். ஆனால் அவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில்,

மருத்துவமனை ஊழியர்களால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என அவரது பெற்றோர் புகார் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவரது உடற்கூறு ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

அதில் அஸ்மாத் ஒவ்வாமை காரணமாகவே மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்