இளம் செவிலியரின் செயலால் கை குழந்தைக்கு நேர்ந்த கதி! கதறி துடிக்கும் தாய்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் மருத்துவமனையில் குழந்தையின் கைவிரலை செவிலியர் துண்டித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்ட 5 மாத குழந்தை ஒன்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு மருந்து ஏற்றுவதற்காக குழந்தையின் கையில் கட்டு போடப்பட்டது. பின்னர் அதை செவிலியர் ஒருவர் பிரித்தார்.

அப்போது குழந்தையின் கட்டை விரலை அவர் தவறுதலாக துண்டித்து விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகம் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையின் விரலை மீண்டும் சேர்த்து விட்டது.

எனினும் அந்த அறுவை சிகிச்சை வெற்றி பெறுமா என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் அந்த குழந்தையை வேறு நவீன மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தையின் தாய் இது குறித்து பொலிசில் புகார் அளித்த நிலையில் இது தொடர்பாக குறித்த செவிலியர் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers