கேரளாவை சேர்ந்த ஆதி என்ற இளைஞர் ஸ்கூட்டரை விற்று அந்து பணத்தை வெள்ள நிவாரணை நிதிக்கு வழங்கியுள்ளார்.
கடந்தாண்டை போலவே இந்தாண்டும் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது கேரளா, ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தங்களால் இயன்ற பண உதவியை பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் கிராபிக் டிசைனராக பணியாற்றும் ஆதி என்பவர், தான் ஆசையாக வாங்கிய ஸ்கூட்டரை விற்று அந்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
புதிதாக வாங்கி ஒரு வருடம் கூட ஆகாத நிலையில், வெறும் 3000 கி.மீ மட்டுமே ஓடிய அந்த ஸ்கூட்டரை ரூ.69000க்கு வாங்கியுள்ளார்.
தற்போது அண்டை வீட்டாரிடம் ரூ.40000க்கு விற்று அந்த பணத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
அதுமட்டுமின்றி தன்னால் இயன்ற அளவு மக்களுக்காக பணத்தையும் திரட்டியுள்ளார், இதுகுறித்த அவரின் பேஸ்புக் பதிவு பலராலும் பகிரப்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளது.