முகத்தில் இரத்தம் வடிய உயிர் பிச்சை கேட்கும் இளைஞர்! கொடூரமாக தாக்கும் கும்பல்.. உலகை உலுக்கிய புகைப்படங்கள்

Report Print Raju Raju in தெற்காசியா
457Shares

டெல்லி கலவரத்தில் எடுக்கப்பட்ட அதிர வைக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் சிஏஏ போராட்டம் கலவரமாக உருமாறியுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை தொடங்கிய கலவரம் இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது.

டெல்லியில் ஜப்பார்பேட், மவ்ஜ்பூர், சாந்த்பாக், குர்ஜீ காஸ், பஜன்பூரா ஆகிய பகுதிகளில் கடுமையான கலவரம் நேற்று முதல் நடந்து வருகிறது.

அதேபோல் நேற்று இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் சிறிய மசூதி ஒன்றும் பஜன்பூரா பகுதியில் கொளுத்தப்பட்டது.

முக்கியமாக இஸ்லாமிய இளைஞர் ஒருவரை சுற்றி நின்று கலவரக்காரர்கள் தாக்கும் புகைப்படமும் வைரல் ஆகியுள்ளது. அந்த இளைஞர் தன்னை விட்டு விடுங்கள் என்று உயிருக்கு கெஞ்சிய நேரத்திலும் கூட அவரை விடாமல் தொடர்ந்து தாக்கி இருக்கிறார்கள்.

அவர் ரத்தம் வடிய தரையில் அமர்ந்து இருக்கிறார். அவரை சுற்றி ஹெல்மெட் மாட்டிக்கொண்டு கையில் குச்சியுடன் பலர் தாக்க தயாராக இருக்கிறார்கள்.

இந்த புகைப்படம்தான் டெல்லி கலவரத்தை அப்படியே எடுத்துக்காட்டி இருக்கிறது. உலகம் முழுக்க அதிர்வலையை ஏற்படுத்திய இப்புகைப்படங்களை பலர் ஷேர் செய்து வருகிறார்கள்.

இந்த புகைப்படத்தை ராய்டர்ஸ் பத்திரிக்கையாளர் டேனிஷ் சித்திக் (REUTERS - Danish Siddiqui) எடுத்துள்ளார்.

நேற்று மாலை தொடங்கிய கலவரத்தில் மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்