கொரோனாவால் இறந்தவருக்கு நடந்த இறுதிச்சடங்கு! அடுத்தநாள் அவர் உயிருடன் இருப்பதாக வந்த தகவலால் அதிர்ந்த குடும்பத்தார்

Report Print Raju Raju in தெற்காசியா

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்த நபருக்கு இறுதிச்சடங்கு நடத்திய பின்னர் அவர் உடல்நலம் தேறி குணமடைந்துவிட்டார் என மருத்துவமனை நிர்வாகம் கூறியது அவர் குடும்பத்தாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் தேவ்ராம் பிஸ்கர் (71).

அவர் கடந்த மே 28ம் திகதி மூச்சு திணறல் பிரச்சனையால் சிவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கு மேல் நடந்தது குறித்து அவரின் மருமகன் கூறுகையில், சிவில் மருத்துவமனையில் உள்ள புற்று நோய் பிரிவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அங்குதான் என் மாமனாரும் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 575 ஆக இருந்தது, அது மிகவும் அதிகம். அப்போது என்னிடம் அந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்து கேட்டபோது நான் கடுமையாக மறுத்தேன்.

பின்னர் காணொளியில் என் மாமனாரை பார்த்துவிட்டு அந்த ஒப்புதல் கடிதத்தில் கையெழுத்திட்டேன்.

பிறகு அடுத்த நாள் என் மாமனார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார் என மருத்துவமனையில் இருந்து அழைத்து சொன்னார்கள்.

அங்கு நாங்கள் சென்றபோது பிஸ்கர் உடல் நீல நிற பாதுகாப்பு உறைகளை கொண்டு சுற்றப்பட்டிருந்தது.

என் மாமனாரின் ஆடையை மட்டுமே எங்களிடம் காண்பித்தனர் அதை வைத்து அவர் உயிரிழந்துவிட்டார் என ஏற்றுக்கொண்டோம். அவரது முகத்தைக்கூட நாங்கள் பார்க்கவில்லை.

இதையடுத்து அவருக்கு இறுதிச்சடங்கு செய்த நிலையில் அடுத்த நாள் மருத்துவமனையில் வந்த போன் அழைப்பில் பிஸ்கருக்கு கொரோனா பாதிப்பு இல்லை அவர் குணமடைந்துவிட்டார், அவரை வந்து அழைத்து செல்லும் படியும் கூறியதை கேட்டு அதிர்ந்தோம்

குழப்பத்துடன் மருத்துவமனைக்கு சென்ற போது தேவ்ராம் பிஸ்கர் உயிரிழந்து விட்டார்.

அதற்கான ஆவணங்களும் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்தனர், இதையடுத்து தவறான தொலைபேசி அழைப்பு வந்திருக்கவேண்டும் என நினைத்து வீடு திரும்பினோம்

வீடு திரும்பிய பிறகும் மூன்றாவது அழைப்பு வந்துள்ளது. இந்த தொலைபேசி அழைப்பிலும், பிஸ்கர் நலமுடன் இருக்கிறார் கவலை கொள்ள வேண்டாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் விசாரித்த போது இரண்டு மணி நேரத்திற்கு முன்புதான் நோயாளியின் உடல்நிலை குறித்து முடிவுகள் வந்தன மருத்துவ அதிகாரி கூறியதால் மன உளைச்சல் அடைந்தோம் என கூறியுள்ளார்.

இது குறித்து புற்றுநோய் மருத்துவமனை டீன் மருத்துவர் ஷஷாங் கூறுகையில், நோயாளியின் குடும்பத்தினரை தொடர்ப்பு கொண்டு தவறான தகவல் பகிரப்பட்டுள்ளது

பிஸ்கருக்கு கொரோனா நோய் பாதிப்பிற்கான அறிகுறிகள் இருந்ததால் குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்திற்கு மாற்றப்பட்டார். அங்கு தான் பிஸ்கர் உயிரிழந்தார்.

அவரின் பரிசோதனை முடிவுகள் வெளிவந்தபோது, அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரியவந்தது. எனவே அவரின் குடும்பத்தினரை அழைத்து அவர் உடல் நலம் தெரிவருகிறார் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் பிஸ்கர் கொரோனா பாதிப்பு இன்றி வேறு உடல் நல பாதிப்பால் உயிரிழந்துவிட்டார் என பரிசோதனை முடிவுகளை குடும்பத்தினருக்கு தெரிவிக்கும் குழுவில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தெரியாது, இந்த குழப்பத்துக்காக மருத்துவமனை சார்பில் அவர் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கோரியுள்ளோம் என கூறியுள்ளார்.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்