நீண்ட நாட்களாக பொதுவெளியில் தலைகாட்டாத வட கொரிய அதிபரின் மனைவி! அரசியலாக்கும் சர்வதேச ஊடகங்கள்!

Report Print Karthi in தெற்காசியா
2693Shares

வட கொரியா அதிபரின் மனைவி கடந்த சில நாட்களாக பொதுவெளியில் பங்கேற்காத நிலையில் அவரது உடல் நலம் குறித்து ஊடகங்கள் பேசத் தொடங்கியுள்ளன.

சமீபத்தில் வட கொரியாவில் நடந்து முடிந்த தொழிலாளர்கள் கட்சியின் ஆண்டுவிழாவில் கூட அவர் பங்கேற்காதது குறித்து பல சர்வதேசிய ஊடகங்கள் தங்கள் சந்தேகத்தினை மேலும் அதிகரித்திருக்கின்றன.

இவர் கடைசியாக ஜனவரி 25 ஆம் தேதி பியோங்யாங்கில் உள்ள ஒரு தியேட்டரில் சந்திர புத்தாண்டு நிகழ்ச்சியில் தனது கணவரோடு கலந்துகொண்டிருந்தார்.

இந்நிலையில் அவர் உடல் நலக்குறைவால் நீண்ட நாட்களாக போராடி வருகிறார் என்றும், பல உள்ளூர் பத்திரிக்கைகள் செய்திகளை வெளியிட்டு வருகின்றது.

நோயால் பாதிக்கப்படவில்லையெனில், தனது மகளை பராமரிப்பதில் அதிக நேரத்தினை செலவிட அவர் முடிவெடுத்திருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அவர் பொது வெளியில் அதிக அளவில் காணப்படவில்லை என்றும் வதந்திகள் பரவி வருகின்றன.

ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிரான தொடர் முன்னெடுப்புகள் காரணமாக வட கொரியாவின் ஒவ்வொரு அசைவுகளும் சர்வதேச அளவில் செய்தியாக்கப்பட்டு வருகின்றன. இதில் அமெரிக்க, ஐரோப்பிய ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெற்காசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்