பல நூற்றாண்டுகளாக காற்றில் மிதக்கும் அதிசய கோயில்

Report Print Trinity in ஆன்மீகம்
362Shares
362Shares
lankasrimarket.com

ஒடிசா மாநிலம் கோனார்க் நகரில் உள்ளது கொனார்க் சூரிய கோயில்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் முதலாம் நரசிம்ம தேவன் என்ற மன்னரால் இந்த கோயில் கட்டப்பட்டது. இங்கு பல அபூர்வ சிற்பங்கள் உள்ளன.

கடற்கரையை ஒட்டி இக்கோயில் அமைந்துள்ளது. ஆனால் கடல் உள்வாங்கியதை அடுத்து இந்த கோயில் இப்போது கடலில் இருந்து சற்று தூரத்தில் காணப்படுகிறது.

இந்த கோயிலில் பிரம்மிப்படைய வைக்கும் அதிசயம் என்னவென்றால் மிதக்கும் சிலைகள்தான்.

இந்த கோயிலின் பிரதான தெய்வம் சூரியன்தான். இந்த கோயில் கட்டும் சமயத்தில் ஒவ்வொரு கற்களுக்கும் இடையில் இரும்பு துகள்கள் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் கோயிலின் மேற்கூரையில் சுமார் 52 டன் எடை கொண்ட மிகப்பெரிய காந்தம் ஒன்று வைக்கப்பட்டதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

இந்த கோயிலில் உள்ள சூரியன் சிலையிலும் இரும்பு துகள் சேர்க்கப்பட்டுள்ளன.

கச்சிதமான இரும்பு மற்றும் காந்த கலவையால் சூரியனின் சிலையானது பல நூறு ஆண்டுகள் காற்றில் மிதந்தபடியே இருக்கிறது.

ஆனால் இப்போது இந்த கோயிலின் சில பகுதிகள் இடிந்து விட்டதால் சிலைகளும் காற்றில் மிதப்பதில்லை. இந்த கோயில் இடிந்ததற்கு முக்கிய கரணம் போர்ச்சுகீசியர்கள் கப்பற்படை வீரர்களே என்று கூறப்படுகிறது.

பழங்காலத்தில் இந்த பகுதியில் துறைமுகம் இருந்துள்ளது. கோயிலும் கடலுக்கு மிக அருகில் இருந்ததால் கோவிலில் பொருத்தப்பட்டிருந்த மிகப்பெரிய காந்தத்தின் சக்தியால் கப்பல்கள் துறைமுகம் வந்து செல்ல இடையூறாக இருந்திருக்கிறது.

இந்த காந்த சக்தியால் சிறு கப்பல்கள் கவிழும் என்று பயந்த போர்ச்சுகீசியர்கள் அந்த காந்தத்தை பெயர்த்தெடுக்க திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

பின் அதன்படியே காந்தத்தை பெயர்த்தெடுத்ததாகவும் இதன் காரணமாகேவ கோயிலின் சில பகுதிகள் சிதைந்து விட்டதாகவும் கூறப்படுகின்றன.

இன்று வரை அந்த காந்தம் என்ன ஆனது எங்கு உள்ளது போன்ற தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும் இந்த கோயில் ஒரு காலத்தில் காற்றில் மிதந்தது உண்மைதான் என்கின்றனர் வரலாறு அறிந்தவர்கள்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்