விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்

Report Print Nalini in ஆன்மீகம்

நாம் நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், நம் வாழ்வில் எல்லா செல்வங்களும், பொருளாதார நிலை உயர இறைவனை நினைத்து இருப்பதுதான் விரதம்.

இந்து சமயத்தில் விரதம் என்பது உண்ணாமல் இருத்தல் அல்லது உணவைச் சுருக்குதல் எனப்படும். நோன்பு, உபவாசம் என்பவை விரதத்துடன் தொடர்புடையது. இந்து மதத்தில் மட்டுமல்லாமல் கிருஸ்துவம், இஸ்லாமிய மதத்தினரும் பல விரதங்களை கடைப்பிடிக்கின்றனர்.

விரதம் என்பது ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை ஆகும்.

விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும் என்பது பெரியோர்கள் கூறுகின்றனர்.

விரதம் இருக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்

 • விரதம் இருக்கும் முந்தைய நாளே வீட்டை நன்றாக கழுவி, சுத்தம் செய்து கோலம் போட்டு தயார்ப்படுத்த வேண்டும்.
 • விரதம் இருக்கும் நாளில் கண்டிப்பாக கோபம் படக்கூடாது.
 • பூஜை அறையை முதல் நாளே நன்றாக சுத்தம் செய்து புனிதமான அறையாக மாற்றிவிட வேண்டும்.
 • சுவாமி படங்களுக்கு சந்தனம், குங்கும பொட்டு வைக்க வேண்டும்.
 • விரத தினத்தில் அதிகாலை வீட்டை சுத்தப்படுத்தி, குளித்து சுத்தமான ஆடையை அணிந்து விட வேண்டும்.
 • பூஜை தொடங்கும் போது எந்த தெய்வத்திற்காக விரதம் இருக்க நினைத்தாலும் பரவாயில்லை, முதலில் விநாயகரை வணங்கிக் கொள்ள வேண்டும்.
 • அனைத்து தெய்வங்களுக்கும் மலர்களை சூட வேண்டும்.
 • எந்த தெய்வத்தின் அனுக்கிரகம் பெற வேண்டி விரதம் இருக்க நினைக்கிறீர்களோ அந்த தெய்வத்தின் படத்தை, விநாயகப்பெருமானின் படத்திற்கு அருகில் வைக்க வேண்டும்.
 • பூஜை அறையில் ஐந்து முக விளக்கு ஏற்றி கவச (கந்த சஷ்டி கவசம்) பாராயணம் செய்து வணங்க வேண்டும்.
 • பெண்கள் மாத விலக்கு ஏற்பட்டிருந்தால் அவர்கள் 8 நாட்கள் கழித்து விரதத்தை மேற்கொள்ளலாம்.
 • விரத நாளில் கண்டிப்பாக மாமிசம் சாப்பிடவே கூடாது.
 • விரதம் இருக்கும் நாளில் கண்டிப்பாகத் தம்பதிகள் தாம்பத்திய உறவில் ஈடுபடக் கூடாது.
 • விரத நாளில் எந்த தெய்வத்தை நினைத்து விரதமிருக்கின்றீர்களோ, 24 மணி நேரமும் அந்த தெய்வத்தை சிந்தையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
 • அந்த தெய்வத்திற்குரிய மந்திரங்கள், ஸ்லோகங்கள், தெய்வ புராணக் கதைகளை படிக்க வேண்டும்.
 • முடிந்தால் 5 பேருக்காவது அன்னதானம் செய்யலாம்.

விரதத்தின் போது சேர்க்கக் கூடாதது

 • பூண்டு, வெங்காயம், வாழைக்காய், பெருங்காயம் ஆகியவை சேர்க்காத உணவுகளை மட்டும் சாப்பிட்டு உபவாச விரதம் இருக்க வேண்டும்.
 • இதில் எந்த உபவாச விரதம் கடைப்பிடிப்பது நல்லது. இருப்பினும் ஒருவரின் உடல் நிலை, ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு உபவாசத்தை நீங்களே தேர்வு செய்யலாம்.
 • பொதுவாக உணவு எடுத்துக் கொள்ளாமல், நீர் மட்டும் அருந்தி இருப்பதற்கு பெயர் தான் உபவாசம். அது தான் உன்னதமான விரத முறையாகும்.

மேலும் ஆன்மீகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்