இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபகச் வெற்றி பெற்றுள்ளதால், தமிழர்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுவதாக தமிழக தலைவர்கள் கூறியுள்ளனர்.
இலங்கையில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களின் ஆதரவு பெரும்பாலும் சஜிதா பிரேமதாசுக்கே இருந்தது. இதனால் கோத்தபாய ராஜபக்சேவின் வெற்றியால் அவர்கள் அச்சத்தில் இருப்பதாகவும், சஜிதா பிரேமாதாசுக்கு ஓட்டு போட்ட தமிழர்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்நிலையில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வெற்றி தமிழர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும் பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், எது நடக்கக் கூடாது என்று தமிழர்கள் வேண்டினார்களோ அது நடந்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், நம் தொப்புள்கொடி உறவாக இருக்கக்கூடிய தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்பது முக்கியம். தமிழர்கள் இலங்கையில் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க அதிமுக அரசு தொடர்ந்து முயற்சி எடுக்கும் என்று கூறியுள்ளார்.
தமிழக தலைவர்கள் பலரும் அங்கிருக்கும் தமிழர்கள் தான் என்ன ஆக போகிறார்கள் என்ற அச்சம் இருப்பதாக கூறி வருவதால், அப்படியெல்லாம் கிடையாது என்று இவர்கள் நினைப்பதை கோத்தபாய ராஜபக்சே மாற்றி காட்டுவாரா என்று பார்ப்போம்.
-
6924255 Gotabhaya Rajapaksa (SLPP)
-
5564239 Sajith Premadasa (NDF)
-
418555 Anura Kumara Dissanayaka (NMPP)
-
38809 M. L. A. M. Hizbullah (IND10)
-
12256 M. K. Shivajilingam (IND11)