சுவிஸ் நாட்டுக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய கெளரவம்: என்ன தெரியுமா?

Report Print Raju Raju in சுவிற்சர்லாந்து
866Shares
866Shares
ibctamil.com

உலகிலுள்ள தரமான சர்வதேச பல்கலைகழக பட்டியலில் சுவிற்சர்லாந்தில் இருக்கும் இரண்டும் பல்கலைகழகங்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.

Times Higher Education மற்றும் THE World University Rankings அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வில் உலகளவில் தரமான மற்றும் சர்வதேச மேற்பார்வை கொண்ட பல்கலைகழக பட்டியலில் சுவிற்சர்லாந்தில் இருக்கும் ETH Zurich, EPFL ஆகிய பல்கலைகழகங்கள் முதல் இரண்டு இடங்களை கைப்பற்றி உள்ளன.

மூன்றாம் இடத்தில் ஹாங்காங் பல்கலைகழகமும், நான்காம் இடத்தில் சிங்கப்பூர் தேசிய பல்கலைகழகமும், ஐந்தாவது இடத்தில் லண்டன் இம்பீரியல் கல்லூரியும் உள்ளன.

இதுகுறித்து THE World University Rankings தலைவர் Phil Baty கூறுகையில், ஒரு பல்கலைகழகமானது உலகளாவிய பார்வையும், உலகளாவிய வலைப்பின்னலும் இருந்தால் மட்டுமே சர்வதேச அளவில் மிளிர முடியும்.

அமெரிக்காவில் குடிபெயர்ந்தவர்கள் விடயத்தில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செய்து வரும் அதிரடி நடவடிக்கையால் திறமையான மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் எனவும் Phil எச்சரித்துள்ளார்.

உலகத்தரம் வாய்ந்த கல்வியில் முன்னணி வகிக்கும் அமெரிக்காவானது இந்த பட்டியலில் உச்ச நிலையில் எந்த இடத்திலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments