சுவிற்சர்லாந்தில் பூநகரி ஆசிரியர் பொன்னம்பலம் முருகவேள் அவர்களுக்கு சரித்திரநாயகர் விருது

Report Print Gokulan Gokulan in சுவிற்சர்லாந்து
285Shares
285Shares
ibctamil.com

03.01.2018-சுவிற்சர்லாந்து பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் ஆசிரியர்.திரு.பொ.முருகவேள் அவர்களுக்கு 02.01.2018 அன்று திருவள்ளுவர் நாளில் தமிழ்க்கல்விப்பணிக்கும் தமிழ் சார்ந்த குமுகாயப்பணிக்குமான சரித்திரநாயகர் விருதினை சுவிற்சர்லாந்து சொலுத்துாண் சோலோ ஒளிப்பதிவு நிறுவனம் ஆண்டு தோறும் நிகழ்த்தும் வாழும்போது வாழ்த்துவோம் என்ற சரித்திரம் குழுவினர் சுவிற்சர்லாந்து தழுவிய மாபெரும் சரித்திரம் நிகழ்வில் சரித்திரநாயகர் விருது வழங்கி மதிப்பளித்திருந்தனர்.

முருகவேள் ஆசிரியர் அவர்கள் பூநகரியிலும் யாழ் இந்துக்கல்லுாரியிலும் கற்றவர். இலங்கையில் ஆசிரியராகவும் அதிபராகவும் கடமையாற்றியிருந்தார்.

அதேசமகாலத்தில் யாழ்ப்பாணம் ஈழமுரசுப்பத்திரிகையின் நிருபராகவும் கடமையாற்றியவர். 1990 ஆண்டுமுதல் சுவிற்சர்லாந்தில் வசித்து வரும் இவர் 1991 முதல் பட்டடிமன்றங்கள் கவியரங்கங்கள் தாளலய நாடகங்களையும் நிகழ்த்தியுள்ளார் மேடைப்பேச்சாளராகவும் திகழ்ந்ததுடன்.

மாணவர்களுக்கான பேச்சுக்கள் கவிதைகளையும் பயிற்றுவித்தவர் 1996 முதல் உலகத்தமிழப்பண்பாட்டியக்கத்தின் பல பொறுப்புகளில் இருந்து பல முன்மாதரியான தமிழ் எழுச்சி மாநாடுகளை நடத்தியவர் உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்கத்தலைமைப் பொறுப்பினையும் வகித்தவர்.

1999 இல் அமரர் வித்துவான் வேலன் அவர்களையும் சுவிற்சர்லாந்திற்கு அழைத்து தமிழில் உயர்பட்டப்படிப்பினைக்கற்றுக்கொண்டவர்களுக்கான பட்டமளிப்புவிழாவினை முதலில் சுவிற்சர்லாந்தில் நிகழ்த்தியவர்.

2004 உம் டாக்டர் இரா சனார்த்தனம் தலைமையில் மிகவும்நேர்த்தியான பட்டமளிப்புவிழாவினை நிகழ்த்தியவர். 2004 இல் வெளிவாரியாக தமிழியல் பட்டப்படிப்பினை நிறைவுசெய்துவர்.

அதற்கான பட்டத்தினை மலேசியா ஏந்தரைாக்கல்லுாரியில் நிகழ்ந்த பட்டமளிப்புவிழாவில் 2007 இல் தமிழியல் பட்டத்தினைப் பெற்றவர்.

உலகநாடுகளில் வாழும் தமிழறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருப்பவர். அமரத்தும் எய்திய தமிழகம் டாக்கடர் இரா சனார்தனம் அமரத்தும் எய்திய மலேசிய தமிழ்நெறிக்கழகதலைவர் முனைவர் இரா வீரப்பன் அமரத்துவம் எய்திய துாய தமிழ்க்கொள்கைச் செயற்பாட்டாளர் தமிழறிஞர் மு.மணிவெள்ளையனார் திரு.கீ.வீரமணி அவர்களுடனும் வ.மு.சேதுராமன் அவர்களுடனும் மகன் திருவள்ளுவர்.

முன்னாள் பச்சையப்பன் பல்கலைக்கழக பேராசிரியர் மு.பி.பாலசுப்பரமணியன் அவர்களுடனும் பாண்டிச்சேரி பேராசிரியர் கதிர்.முத்தையன் ஆகியவர்களுடன் தமிழ்ப்பணிகளுக்காக நெருங்கிப்பழகிக்கொண்டிருப்பவர். இவர்களிடமிருந்துபெற்றுக் கொண்ட தமிழியக்கொள்கையால் 03.06.2000 இல் தமிழ்நெறித்திருக்குறள் நெறித்திருமணத்தினை ஆரியமுறைகளும் சமசுகிருதமும் இன்றி தமிழ்மொழியில் திருக்குறளையும் அருட்பாவையும் ஓதி பெரியவர்களின் ஆசிகளுடன் திருமண நிகழ்வினை நிகழ்த்திக் கொண்டவர்.

தமிழர்கள் துாயதமிழ் பேசவேண்டும் எழுதவேண்டும் என்ற எண்ணம் கொண்டிருப்பதுடன் தமிழில்கையொப்பம் இடவேண்டும் என்பதில் விருப்பம் கொண்டவர். இதனால் இவரின் இருபிள்ளைகளும் தமது சுவிற்சர்லாந்து குடியுரிமை அட்டையில் தமிழில் கையொப்பத்தினை இதுவரை பேணிவருகின்றனர்.

தமிழ்ப்பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்கள் இடுவதினை ஊக்குவிப்பவர். தானும் தமது எழுத்துப்பணிகளில் இயன்றளவு துாய தமிழினை காத்துவருபவர்.குமரிநாடு.கொம் என்ற இணையத்தளத்தினை இயக்கிக் கொண்டிருப்பவர்.

தைப்பொங்கலையே தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடிவருபவர். இதனை சுவிற்சர்லாந்து மக்களும் அறியும் வண்ணம் சுவிற்சர்லாந்து பத்திரிகைகளிலும் தைப்பொங்கல்பற்றியும் தமிழ்ப்புத்தாண்டுபற்றியும் செய்திகளை வெளிவரச் செய்துள்ளார்.

தமிழைப்பற்றியும் தமிழர் பண்பாடுகள் பற்றியும் வெளிநாட்டவர்களுக்கு விளக்கும் செயற்பாடகுளை காலத்துக்கு காலம் செய்துகொணடிருப்பவர். சுவிற்சர்லாந்தின் பல்மத அமைப்பினர் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் பல சமயங்களின் வழிபாட்டு நிகழ்வில் தமிழர்களின் வழிபாட்டுநிகழ்வினை ஆரிய முறை இன்றியவற்றை நிகழ்விக்கும் செயற்பாட்டினை நான்கு ஆண்டுகள் நிகழ்த்தியவர்.

பேண்நகர அமைப்புகளுடன் இணைந்தபணிகள்பலவற்றை செய்துள்ளார். பன்னாட்டு ஆசிரியர்குழுவில் 10 ஆண்டுகளுக்கு மேல் இணைந்து செயற்பட்டு தமிழ்பற்றியும் தமிழர்பண்பாடுபற்றியும் அவர்கள் அறியும் செயற்பாட்டினை செய்துள்ளார்.

தமிழகம் தமி்ழ்ப்பணி தமிழகம் தமிழாலயம் இதழ்களில் கவிதைகள் கட்டுரைகள் எழுதிவருபவர் சில இணையத்தளங்களில் தனது கட்டுரைகளையும் எழுதிவ ருபவரும் இவர் 2015 இல் தமது 50 ஆவது அகவையில் சுவிற்சர்லாந்தும் தமிழர்களின் குடியேற்றமும் என்ற நுாலினையும் பூநகரிப் பூப்பூங்கா என்ற இரு நுால்களையும் வெளியிட்டார்.

1996 ஆம் ஆண்டு முதல் சுவிற்சர்லாந்து தலைநகர் பேணில் சரசு(ஸ்)வதி தமிழ்ப்பாடசாலையின் ஆசிரியராகவும் முதல்வராகவும் தொடங்கி 2000 ஆம் ஆண்டு முதல் பேர்ண் கல்வித்திணைக்ளத்துடன் சுவிற்சர்லாந்தில் பேரண் வள்ளுவன் பாடசாலையை ஆரம்பித்து இயக்கி வருகின்றார்.

இப்பாடசாலையில் 12 ஆம் தரம்வரை மாணவர்கள் கற்று வெளியேறியுள்ளார்கள். தற்போது கற்றுக் கொண்டும் இருக்கின்றார்கள். இவரின் பாடசாலையில் 180 முதல் 200 வரையிலான மாணவர்கள் நடைமுறையாண்டுகளில் கற்பார்கள். இதுவரையில் பலநுாற்றுக்கணக்கான மாணவர்கள் இவரின்பாடசாலையில் கற்று வெளியேறியுள்ளார்கள்.

இங்கு தமிழ்கற்கும் மாணவர்கள் சிறப்பாக திருக்குறள் ஓதும் முறையினையும் தமிழ்பற்றிய சிறப்பு அறிவுகளையும் பெற்று சுவிற்சர்லாந்தில் சிறந்த தமிழர்களாக வாழ்கின்றார்கள்.

இவரிடம் கல்விகற்றமாணவர்களின் பிள்ளைகள் இன்று இவரின் மாணவர்களாக பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் கற்றுவருகின்றார்கள் இருதலைமுறையினருக்கு சுவிற்சர்லாந்தில் தமிழ்கற்பித்த பெருமையினை பெறுகின்றார். பேர்ண் வள்ளுவன் பாடசாலையில் திருக்குறள் ஓதியே மாணவர்கள் வகுப்பில் கல்வியினை ஆரம்பிப்பார்கள்.

இரண்டுஆண்டிற்கு ஒரு முறை தைப்பொங்கல் காலத்தில் தமிழப்புத்தாண்டு விழா திருவள்ளுவர் திருவுருவப்படத்தினைப் பல்லக்கில்ஏற்றி தமிழ்வாத்தியங்களான உடுக்கு பேரிகை(பறை) தப்பு ஆகிய வற்றின் மேளதாளங்களுடன் திருவள்ளுவர் ஊர்வலத்துடன் ஆரம்பமாகும். இவருடைய தமிழ்ப்பணி ஆசிரியப்பணிதனை தமிழகம் மலேசியா தமிழறிஞர்கள் பத்திரிகைகள் இதழ்கள் தமிழகம் புதிய தலைமுறை தொலைக்காட்சி கலைஞர் தொலைக்காட்சி என்பன பாடசாலைக்கு வந்து ஒளி ஒலிப்பதிவுசெய்து அவணப்படுத்தி உலகத்தமிழர்களுக்கு ஒளிபரப்பி சுவிற்சர்லாந்து தமிழ் மாணவர்களை உற்சாகப்படத்தி ஊக்கிவித்தன் மூலம் ஏனைய மாணவர்களும் தமிழை விரும்பிக்கற்க துாண்டப்பட்டனர்.

2010 இல் தமிழகத்தில் டாக்டர் திரு. சனார்த்தனம் அவர்களின் உலகத்தமிழர் பேரமைப்பின் சார்பில் தமிழக பெரும் அறிஞர்கள் விழா எடுத்து நற்றமிழ் விருது வழங்கிமதிப்பளிக்கப்பட்டது. 2015 இல் பேராசிரியர் திரு. மு.பி.பாலசுப்பிரமணியன் அவர்களின் பவளவிழாவில் தமிழ்த்துாதர் தனிநாயகம் அடிகள் விருது வழங்கி மதிப்பளித்திருந்தார்கள்.

சுசிற்சர்லாந்து உலகத்த மிழ்மறை இயக்கம் பேர்ண் வள்ளுவன் பாடசாலை சார்பாக குமரிநாடு.கொம் இணையம் சார்பாக சரித்திரம் விருதுக்குழுவினருக்கு நன்றிகளைத் தெரிவித்தும் கொள்கின்றார். இதன்போது யாழ் பல்கலைக்கழகத்தில் வர்த்தகத்துறையில் பட்டம் பெற்று கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் கற்பித்த திரு.இலிங்கநாதன் ஆசிரியர் அவர்களுக்கும் சரித்திரநாயகர் விருது வழங்கப்பட்டது.

இளையதலைமுறையினர் பலரும்பல்துறையில் சரித்திரம் விருதினைப்பெற்றுக் கொண்டார்கள். ஆனால் தமிழில் இலக்கியதுறையில் தமிழ் இளையவர்கள் இன்னும் வளர்ச்சி பெறவேண்டிய நிலையில் உள்ளார்கள். அதற்கான அடுத்த கட்ட ஊக்கப்படுத்தல்கள் அவசியம்.

தொடர்ந்து இசைத்துறை நடன நடிப்புத்துறை உயர்வுகண்டிருப்பது போன்று முத்தமிழின் இயல்தமிழும்புலம்பெயர் இளைய தலைமுறையினரிடம் வளர்ந்தால் தமிழை அடுத்த தலைமுறையினருக்கு நிறைவாகக்கடத்தியுள்ளோம் என்ற பெருமிதம் பெறலாம் தாய்நாட்டை இழந்த இடரினை புலம் பெயர் தமிழர்கள் ஓரளவுக்காயினும் மறக்கலாம்.

உண்மையில் இதற்கான பணிகள் வெற்றி பெறும் நிலைகள் உள்ளன. தமிழை சிறப்பானக எழுதும் அளவுகற்றுக் கொண்ட இளையவர்கள் இயல்பான திறனுடையவர்கள் இதனைச்சாதிப்பார்கள் என்பது திண்ணம். நிறைத்ததமிழ் இளையவர்கள் இவற்றை இனிச்சாதிக்கவுள்ளார்கள்.தமிழினி மெல்லச்சாகும் என்பது சாகும் என்று சுவிற்சர்லாந்துமாணவர்கள் திகழ்கின்றார்கள்.

அழி்யும்மொழிகளின் வரிசையில் ஐ.நா.சபை யுனசு(ஸ்)கோ தமிழை இணைத்துள்ளது. இதிலிருந்தும் தமிழினை மீட்கும் கடமை புலம் பெயர்ந்த தமிழர்களிடம் உண்டு இது ஒவ்வொரு திழனின் வாழுகாலக்கடமையாகவுள்ளது.விருதுகள் இவற்றைக்குறிக்கோளாக்கொண்டிருப்பதனை அனைவரும் உணர்வோம்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்