சுவிட்சர்லாந்தில் நள்ளிரவில் நடமாடிய நிர்வாண மனிதன்: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
202Shares
202Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் மர்ம நபர் ஒருவர் தினத்தோறும் நள்ளிரவில் நிர்வாணமாக நடமாடி வருவது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெர்ன் மாகாணத்தில் உள்ள Wynau நகராட்சியிலேயே குறித்த சம்பவம் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த நபர் தொப்பி ஒன்றை அணிந்து கழுத்தில் ஸ்கார்ஃபுடன் ஷூ மட்டுமே அணிந்து காணப்படுவதாக தொலைவில் இருந்து பார்த்த நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுமார் ஓராண்டு காலமாக தினசரி இந்த நிகழ்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதே பகுதியில் குடியிருக்கும் பெண்மணி ஒருவரும் குறித்த நிர்வாண மனிதரை நேரிடையாக கண்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

பணி முடிந்து பெரும்பாலும் நள்ளிரவு தாண்டியே குடியிருப்புக்கு திரும்பும் அவர், அடிக்கடி நிர்வாண மனிதரை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுவதாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட பொலிசார், இரவில் ரோந்து பணிக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

ஆனால் ரோந்தில் ஈடுபட்ட பொலிசாரால் குறித்த நிர்வாண மனிதரை அடையாளம் காண முடியவில்லை என தகவல் அளித்துள்ளனர்.

இதனிடையே புகார் அளித்த பெண்மணியிடம் பொலிசார் வைத்த கோரிக்கையின்படி, அவர் ஒருமுறை அந்த நிர்வாண மனிதரை தொலைவில் இருந்து புகைப்படம் எடுத்துள்ளார்.

மேலும் இந்த புகைப்படங்களால் அந்த நபர் குறித்த விசாரணையை இனியேனும் பொலிசார் துரிதப்படுத்துவார்கள் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்