சூரிச்சில் நதிக்கு மேலாக கேபிள் கார் திட்டம்: நாட்டிற்கு வங்கி ஒன்றின் அன்பளிப்பு

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சூரிச் நகரத்திற்கு அன்பளிப்பாக, வங்கி ஒன்று சூரிச் நதிக்கு மேலாக கேபிள் கார் போக்குவரத்தை துவங்கும் திட்டம் ஒன்றை அளிக்கவுள்ளது.

2019ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில் இத்திட்டம் துவங்க இருக்கிறது.

Zuribahn என்று அழைக்கப்படும் இத்திட்டத்திற்கு ஆகும் செலவு 40 முதல் 60 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் முழுவதும் Zurich Cantonal Bank வங்கி, சூரிச் நகரத்திற்கு வழங்கும் அன்பளிப்பாகும்.

ஒவ்வொன்றும் 24 பேரை ஏற்றிக் கொண்டு செல்லும் வசதியுடைய 18 கேபிள் கார்களை இயக்கும் திட்டம் உள்ளது.

கேபிள் கார்கள் ஒரு பக்கம் Mythenquai கடற்கரையையும் மறுபக்கம் Zurichhorn பூங்காவையும் இணைக்கும்.

கேபிள் கார் திட்டம் துவங்க இருக்கும் அதே நேரத்தில் அதற்கு எதிர்ப்பும் ஏற்பட்டுள்ளது.

ஆல்ப்ஸ் மலையின் இயற்கைக் காட்சியை கேபிள் காரின் கேபிள் மறைக்கும் என்றும், அதன் அழகைக் குறைக்கும் என்றும் பலர் கருதுகின்றனர்.

ஆனால் திட்ட வடிவமைப்பாளர்களோ இயற்கைக் காட்சிகள் பாதிக்கப்படாது என்றும்,கேபிள் கார் போக்குவரத்து, இயற்கையோடு இயைந்துவிடும் என்றும் கூறியுள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் ஏற்கனவே பல இடங்களில் கேபிள் கார் இணைப்புகள் உள்ளன என்றாலும், சூரிச் மாதிரியான போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பெரும்பாலும் கேபிள் கார் வசதி இல்லை.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers