அகதிகளை வேலை தேடிக் கொள்ள வலியுறுத்தும் சுவிஸ் அரசு!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து அரசு தன் நாட்டிலிருக்கும் அகதிகளை வேலை தேடிக் கொள்ள வலியுறுத்தி வருகிறது, அவர்களுக்காக அரசால் செலவிடப்படும் தொகை அதிகம் என்பதும் அதற்கு ஒரு காரணம் ஆகும்.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11,000 பேர் சுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பிக்கிறார்கள்.

அவர்கள் எதிர்கொள்ளும் முதல் சவால் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொள்வதாகும். அடுத்த சவால் வேலையைத் தேடிக் கொள்வது அல்லது கல்வி பயில்வது.

அகதிகளிடையே வேலை வாய்ப்பு விகிதம் மாகாணத்துக்கு மாகாணம் மாறுபடுகிறது.

2018 ஏப்ரல் கணக்கின்படி, புகலிடக் கோரிக்கையாளர்களிடையே வேலை பார்க்கும் விகிதம் Glarus, Jura, Nidwalden, மற்றும் Uri மாகாணங்களில் 0% ஆக தொடங்கி, Graubündenஇல் 17.5% ஆக முடிகிறது.

சில மாகாணங்கள் சில குறிப்பிட்ட தொழில்துறைகளில் அகதிகளை அனுமதிப்பதில்லை,வேறு சில மாகாணங்கள் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கின்றன.

வேலையில்லாத அகதிகளும் புகலிடக் கோரிக்கையாளர்களும் அரசு வழங்கும் உதவியில் வாழ்கிறார்கள், அதனால் அரசுக்கு ஏற்படும் செலவு, 2017இல் 988 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள், இது 2008ஐ விட மூன்று மடங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

அகதிகளுக்காக செலவிடப்படும் இந்த பெரிய தொகையும் அகதிகளையும் புகலிடக் கோரிக்கையாளர்களையும் வேலை செய்ய வற்புறுத்துவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.

மே மாதம் 1ஆம் திகதி முதல் 70 சதவிகிதம் அகதிகளை வேலை செய்ய வைக்கும் நடவடிக்கைகளில் அரசு இறங்கியுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers