உலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிர்ந்த சுவிஸ் தேசிய கொடி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் தேசிய தினத்தை முன்னிட்டு உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் சுவிஸ் தேசிய கொடி வண்ணம் ஒளிரவிடப்பட்டது.

வியாழனன்று மாலை முதல் புர்ஜ் கலிபா கட்டிடம் சுவிஸ் வண்ணத்தால் ஒளிர்ந்தது. இது தொடர்பான புகைப்படங்களை ஐக்கிய அமீரகத்தில் இயங்கும் சுவிஸ் தூதரகம் வழியாக சமூகவலைதளங்களில் பகிரப்பட்டது.

சுவிஸ் தேசிய தினத்தை முன்னிட்டு புர்ஜ் கலிபா கட்டிடத்தில் சுவிஸ் தேசிய கொடியின் வண்ணம் ஒளிரவிடப்பட்டதாக தூதரகத்தில் இருந்து வெளியான தகவலில் குறிப்பிட்டுள்ளனர்.

உலகின் குறிப்பிடத்தகுந்த நாடுகளின் தேசிய தினங்களை ஆதரிக்கும் வகையில் புர்ஜ் கலிபா கட்டிடத்தில் அந்தந்த நாடுகளின் தேசிய கொடியை ஒளிரவிடுவதை வாடிக்கையாக மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் இந்த 206 மாடி கட்டிடமானது உலகின் உயரமான கட்டிடமாக கருதப்படுகிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்