இரவானாலே... சொந்த சகோதரனால் பல ஆண்டுகளாக: சுவிஸ் சிறுமியின் பகீர் அனுபவம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் லூசெர்ன் பகுதியில் சொந்த சகோதரனால் பல ஆண்டுகளாக வன்கொடுமைக்கு சிறுமி ஒருவர் இரையான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பெற்றோர், ஆசிரியர் என பலரிடமும் உதவ கோரிய போதும் இறுதி வரை ஏமாற்றமே மிஞ்சியதாக பாதிக்கப்பட்ட சிறுமி கண்கலங்கியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த லூசெர்ன் மண்டல நீதிமன்றம், குறித்த நபருக்கு 2.5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 8 வயதாக இருக்கும்போது, விளையாட்டாக தொடங்கிய பாலியல் சீணடல்கள் பின்னர், பலாத்காரத்தில் முடிந்துள்ளது.

பெற்றோரின் இல்லத்தில் இருவரும் ஒன்றாக விளையாடிய காலகட்டத்திலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.

இளைஞரான அவர் குறித்த சிறுமிக்கு 12 வயதாக இருக்கும்போது முதன் முறையாக வன்புணர்வில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.

தொடர்ந்து பல ஆண்டுகள் இது நீடித்து வந்துள்ளது. இரவில் சிறுமியின் அறைக்குள் ரகசியமாக நுழையும் அவர், சிறுமியை தமது பாலியல் இச்சைக்கு இரையாக்கி வந்துள்ளார்.

வாரத்தில் மூன்று முறை கூட இந்த கொடூரம் அரங்கேறியுள்ளதாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

தமது சகோதரரின் இந்த பாலியல் சீண்டல்களுக்கு பயந்து இரவானால் பல எண்ணிக்கையிலான உடைகளை உடுத்தும் நிலை ஏற்பட்டதாகவும்,

பலமுறை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகவும், எட்டி உதைத்து துன்புறுத்தியிருப்பதாகவும் கூறும் சிறுமி, இருந்தும் அவர் தம்மை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.

சில வேளைகளில், தமது எதிர்ப்புகளால் மட்டுமே அவர் பின் வாங்கியுள்ளதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.

12 வயது கடந்த நிலையில், ஒருமுறை தமது பெற்றோரிடம் இந்த விவகாரம் தொடர்பில் பேசிய தமது, எந்த உதவியும் கிடைக்கவில்லை என கூறும் சிறுமி,

தமது சகோதரனை பெற்றோர் கண்டிக்கவில்லை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தமது சகோதரனின் தாக்குதல் மேலும் அதிகரித்தது என்றார் அவர்.

பெற்றோரால் உதவ முடியாத நிலையில், பாடசாலை ஆசிரியரிடம் தமக்கு நடப்பதை அவர் சுட்டிக்காட்டிய நிலையில்,

உளவியல் ஆலோசனை பெறவே அவர்கள் பரிந்துரைத்ததாகவும் சிறுமி நினைவு கூர்ந்துள்ளார்.

ஒருகட்டத்தில் தமது சகோதரர் தொடர்பில் புகார் அளித்துள்ளார் சிறுமி. இருப்பினும், அவர் மீது வழக்குப் பதியவே நீண்ட 10 ஆண்டுகளானது என கூறும் அவர்,

தற்போது மண்டல நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதித்துள்ளது தமக்கு மன நிறைவை தருவதாக அமைந்துள்ளது என்றார்.

ஆனால் இந்த தண்டனை என்பது இறுதி அல்ல எனவும், பெடரல் நீதிமன்றத்தில் மேல்முறையீடுக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதுவரை எதுவும் இறுதி அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்