வெளிநாட்டில் ஒரு குடும்பத்தையே கொலை செய்த கொடூரன்: சுவிஸில் அப்பாவியாக வாழ்ந்து வந்தது அம்பலம்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

போஸ்னியா நாட்டில் கொள்ளை சம்பவத்தை அடுத்து ஒரு குடும்பத்தையே கொலை செய்து தப்பிய நபர், சுவிஸில் அப்பாவியாக வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

போஸ்னியா நாட்டவரான Zoran கடந்த 1993 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கொள்ளை சம்பவத்தை அடுத்து 6 உறுப்பினர்கள் கொண்ட ஒரு குடும்பத்தை கொடூரமாக கொலை செய்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக 1995 ஆம் ஆண்டு தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் அதே ஆண்டு சிறையில் இருந்து தப்பிய Zoran தமது சகோதரரின் பெயரில் ஆவணங்கள் தயார் செய்து சுவிட்சர்லாந்தில் உள்ள லூசெர்ன் மண்டலத்தில் குடிபெயர்ந்துள்ளார்.

மட்டுமின்றி 40 வயதான சுவிஸ் பெண்மணி ஒருவரை திருமணம் செய்து கொண்டு மூன்று பிள்ளைகளுக்கு தந்தையும் ஆகியுள்ளார்.

சிறையில் இருந்து தப்பிய Zoran தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த போஸ்னியா பொலிஸ் தரப்பு,

தற்போது சுவிஸில் வேறு அடையாளங்களுடன் குடியிருந்துவரும் Zoran-ஐ கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடிவடிக்கையின் ஒருபகுதியாக கடந்த மே மாதம் அவரை போஸ்னியாவுக்கு நாடுகடத்த தீர்ப்பாகியுள்ளது.

ஆனால் தமக்கு சுவிட்சர்லாந்தில் குடும்பம் இருப்பதாக கூறி, தம்மை நாடுகடத்துவது முறையல்ல எனவும் வாதிட்டு வந்துள்ளார்.

தற்போது பெடரல் குற்றவியல் நீதிமன்றம் மற்றும் பெடரல் உச்ச நீதிமன்றம் Zoran-ஐ நாடுகடத்துவது தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்