சுவிஸில் நிர்வாண நிலையில் சடலமாக மீட்கப்பட்ட தம்பதி: வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் ஜூரா மண்டலத்தில் குடியிருப்பு ஒன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட தம்பதிகள் தொடர்பில் பகீர் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த திங்களன்று பகல் ஜூரா மண்டலத்தின் Courfaivre பகுதியில் உள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து கத்தியால் வெட்டப்பட்ட காயங்களுடன் கணவன் மனைவி இருவரின் சடலங்களை பொலிசார் மீட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் வெளியிட்டுள்ள தகவல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மீட்கப்பட்ட இரு சடலங்களும் நிர்வாண நிலையில் இருந்ததாகவும், இந்த விவகாரம் தொடர்பில் கடிதம் ஒன்று சிக்கியதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி கடந்த 13 ஆம் திகதி தமது விருப்பமின்றி, கணவர் தம்மை பலாத்காரம் செய்ய முயல்வதாகவும், துப்பாக்கி காட்டி மிரட்டுவதாகவும் மரணமடைந்த அந்த பெண்மணி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார்.

இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், அந்த நபரிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

மட்டுமின்றி, தமது மனைவியை சந்திக்க தடை விதித்துள்ளதுடன், குடியிருப்பில் அவருக்கான தனிப்பட்ட சாவியையும் பொலிசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Image: Facebook

இதனிடையே திங்களன்று காலை, அந்த கணவர் தமது நண்பர்கள் சிலருடன் வேட்டைக்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

மேலும், தமது நண்பரின் குடியிருப்புக்கு சென்று தமது வேட்டை நாய்களை அழைத்துவர சென்றுள்ளார்.

சுமார் 8 மணியளவில் வேட்டைக்கு தயாரான தமது நண்பர்களிடம், தாம் தாமதமாக மாலை நேரம் குழுவுடன் இணைந்து கொள்வதாக கூறியுள்ளார்.

இவரது வாகனம், அலைபேசி, வேட்டை நாய்கள் என அத்தனையும் நண்பரின் குடியிருப்பு அருகே இருந்து பின்னர் பொலிசாரால் மீட்கப்பட்டது.

Picture: 20M

இதனிடையே 10.15 மணியளவில், கணவன் மனைவி இருவரது சடலங்களும் நிர்வாண நிலையில் பொலிசாரால் மீட்கப்பட்டது.

இரண்டு கத்திகளும் சடலங்களுக்கு அருகே இருந்து மீட்கப்பட்டன. உடம்பில் ஏற்பட்ட காயங்களாலையே இருவரும் மரணமடைந்துள்ளனர்.

மனைவியின் உடம்பில் கத்தியால் தாக்கப்பட்ட காயங்கள் அதிகம் இருந்துள்ளன. மேலும் கண்டெடுக்கப்பட்ட கடிதமானது இருவரில் யார் எழுதினார்கள் என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

அந்த குடியிருப்புக்குள் என்ன நடந்திருக்கும் என்பது தொடர்பில் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்