சுவிஸ் தூதரக பெண் ஊழியரை சிகிச்சைக்காக அனுப்பவேண்டும்: கோரிக்கையை நிராகரித்த இலங்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து
257Shares

சுவிஸ் தூதரக பெண் ஊழியர் இலங்கையில் கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயம் இரு நாடுகளுக்கிடையே உரசலை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பெண்ணை சுவிட்சர்லாந்துக்கு சிகிச்சைக்கு அனுப்ப கோரப்பட்டுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சரான Dinesh Gunawardena, பல முறை கோரிக்கை விடுத்தும், இதுவரை, நடந்த சம்பவம் குறித்து அந்த பெண் அறிக்கை அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக, அவரால் அறிக்கை அளிக்கமுடியவில்லை என சுவிட்சர்லாந்து தெரிவித்திருந்தது.

இதற்கிடையில் அவரையும் அவரது குடும்பத்தினரையும் மருத்துவ சிகிச்சைக்காக சுவிட்சர்லாந்துக்கு அழைத்துச் செல்ல ஒரு கோரிக்கை வந்துள்ளதாக Gunawardena தெரிவித்தார்.

சுவிஸ் அதிகாரிகள் அதற்காக ஆம்புலன்ஸ் விமானம் ஒன்றையும் கொண்டுவர முயன்றதாகவும் அவர் தெரிவித்தார்.

செவ்வாய் அன்று, இலங்கை அரசு, அந்த பெண், பொலிசாரிடம் அறிக்கை ஒன்றை அளிக்காமல் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்றுவைத்துள்ளது.

அந்த பெண்ணிடமிருந்தோ, சுவிஸ் தூதரிடமிருந்தோ முறைப்படி புகார் கிடைக்கும் முன்பே, பொலிசார் விசாரணை ஒன்றை துவக்கியதாகவும், ஆனால் குற்றச்சாட்டில் குறைந்த அளவே உண்மை இருப்பதாக தெரியவந்ததாகவும் Gunawardena தெரிவித்தார்.

இது இன்னொரு தவறான தகவல், இது எங்கள் நாட்டின் தலைமை மீது சேற்றை வாரி இறைப்பதற்கு ஒப்பானது என்றார் அவர்.

கொழும்புவிலிருக்கும் வெளிநாட்டு தூதர்கள் அனைவரையும் நேற்று அழைத்து அரசின் நிலைப்பாடு குறித்து Gunawardena விளக்கியுள்ளார்.

நடந்ததாகக் கூறப்படும் விடயம் தொடர்பாக கிடைத்த ஆவணங்கள், சுவிஸ் தூதரக ஊழியர் கடத்தப்பட்டதாக கூறப்படும் விடயங்களுக்கும், உண்மையில் நடந்த விடயங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதையே காட்டுவதாக இலங்கை அரசு முன்னர் தெரிவித்திருந்தது.

அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை, இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக அலுவலர் தாக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, சுவிஸ் மாகாண செயலரான Pascale Baeriswyl, பெர்லினில் இருக்கும் சுவிட்சர்லாந்துக்கான இலங்கை தூதரான Karunasena Hettiarachchiயை, பெர்னுக்கு வந்து உண்மை நிலை குறித்து விளக்குமாறு உத்தரவிட்டார்.

இலங்கை பொலிஸ் அதிகாரியான Nishantha Silva என்பவர், நவம்பர் 16 அன்று தேர்தலுக்குப்பின் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியானதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்துக்கு தப்பியோடினார்.

அவர், ராஜபக்சவின் சகோதரரான மகிந்த ராஜபக்ச அரசில் ராஜபக்ச பாதுகாப்புத்துறை தலைவராக இருந்தபோது, ஊடகவியலாளர்களும் சமூக ஆர்வலர்களும் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட மற்றும் மாயமான விடயங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்