தனது பிறந்த நாளை தன்னுடன் கொண்டாட வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதி!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பொதுவாக தலைவர்களின் பிறந்த நாட்களை மக்கள் கொண்டாடுவார்கள். ஆனால், சுவிஸ் ஜனாதிபதி, தனது பிறந்தநாளில் பிறந்த அனைவரையும், தன்னுடன் பிறந்தநாள் கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

சுவிஸ் ஜனாதிபதியான Simonetta Sommaruga, மே மாதம் 14ஆம் திகதி தனது 60ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

அதே திகதியில் தங்கள் 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் சுவிஸ் குடிமக்களை தன்னுடன் பிறந்தநாளை கொண்டாட வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் அவர்.

சமூக ஊடகம் ஒன்றில் தனது அதிகாரப்பூர்வ அழைப்பிதழை வெளியிட்டுள்ளார் அவர். அந்த அழைப்பிதழில் தனது இளவயது புகைப்படத்துடன், 2020ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி உங்களுக்கு 60 வயதாகிறதா?

Simonetta Sommaruga is celebrating her 60th birthday in May

அப்படியானால் வாருங்கள், நாம் இணைந்து பிறந்தநாள் கொண்டாடுவோம் என்று கூறுகிறது அந்த அழைப்பிதழ்.

உண்மையில், தனது பிறந்தநாளை பெரிய அளவில் கொண்டாடாமல் தவிர்ப்பதற்காகவே Simonetta இந்த மாதிரி ஒரு திட்டம் போட்டிருப்பதாக செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Simonetta மிகவும் பிஸியாக இருப்பதாகவும், இந்த ஆண்டு, நண்பர்கள் குடும்பத்தினர் அனைவரையும் அழைத்து பெரிய பார்ட்டி வைத்து பிறந்தநாள் கொண்டாட நேரமில்லை என்பதாலேயே இந்த திட்டம் போட்டிருப்பதாகவும் தெரிவிக்கிறார் அவர்.

மொத்தத்திலேயே 250 சுவிஸ் குடிமக்கள்தான் Simonettaவின் பிறந்தநாள் அன்று பிறந்திருப்பதாகவும், அவர்களிலும் சிலர் வெளியூர் சென்றிருக்கலாம், சிலர் வேலையாக இருக்கலாம், சிலர் நோய்வாய்ப்பட்டிருக்கலாம் என்பதால் குறைந்த அளவிலான விருந்தினர்களே அன்று வருவார்கள் என அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார் அந்த செய்தி தொடர்பாளர்.

அத்துடன், அந்த பிறந்தநாளுக்கான செலவுகள் அனைத்துமே Simonettaவின் சோந்த பணத்திலிருந்துதான் செய்யப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

The Swiss president tweeted some official invitations

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்