ஒரு இடத்திலிருந்து வரவில்லை இந்த கொரோனா: சுவிட்சர்லாந்தில் கொரோனா நுழைந்தது எப்படி?

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்து மக்களிடையே கொரோனா வைரஸின் பல்வேறு வகைகள் காணப்படுவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இது, சுவிட்சர்லாந்துக்குள் கொரோனா ஓரிடத்திலிருந்து பரவவில்லை, வெவ்வேறு மூலங்கள் வாயிலாக கொரோனா பரவியிருக்கலாம் என்பதை காட்டுவதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆய்வு ஒன்றை மேற்கொண்ட சுவிஸ் அறிவியலாளரான Tanja Stadler, பல்வேறு இடங்களிலிருந்து சுவிட்சர்லாந்துக்குள் கொரோனா வைரஸ் நுழைந்துள்ளதைக் கண்டறிந்துள்ளார்.

முதலில் கொரோனா தொற்றிய 1,000 நோயாளிகளிடமிருந்து DNA மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

பின்னர் அது படிப்படியாக குறைக்கப்பட்டு 120 ஆக்கப்பட்டது. அவற்றில் பல, வெவ்வேறு மரபணு அமைப்பைக் கொண்டிருந்தன.

அப்படி பல்வேறு கொரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகளை ஆராய்ந்ததில், சுவிட்சர்லாந்தில் ஒரு கொள்ளை நோய் பரவல் அல்ல, பல கொள்ளைநோய் பரவல்கள் உருவாகியிருந்தது தெரியவந்துள்ளது, அதாவது, சுவிட்சர்லாந்தில் கொரோனா பரவுவதற்கு காரணம் ஒரே ஒரு ஆள் அல்ல!

அத்துடன், சுவிட்சர்லாந்தின் டிசினோவில், பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி, முதல் நபருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்படுவதற்கு பல நாட்கள் அல்லது பல வாரங்கள் முன்பே, கொரோனா வைரஸ் சுவிட்சர்லாந்துக்குள் உலவிக் கொண்டிருந்திருக்கலாம் என்றும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்