பார்ப்பதற்கு அழகாக தெரியும் நீர்வீழ்ச்சி... ஆனால் குளிக்கவேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் பேசலுக்கு அருகில் உள்ள அந்த நீர்வீழ்ச்சியின் தண்ணீர் பார்ப்பதற்கு பளிங்கு போல் தெளிவாகத்தான் உள்ளது.

சமூக ஊடகங்களில் அந்த நீர்வீழ்ச்சியின் படத்தைப் பார்க்கும் யாருக்கும், அதில் ஒரு உற்சாகக் குளியல் போடலாமே என்றுதான் தோன்றும்.

ஆனால், அதில் குளித்தால் நோய்வாய்ப்படுவீர்கள் என அதிகாரிகள் எச்சரித்துள்ளார்கள். அந்த ஆறு, Kilchbergஇலுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றிற்கு நெருக்கமாக ஓடுகிறது. ஆகவே, அடிக்கடி அதில் கழிவு நீர் கலப்பதுண்டு.

எனவேதான் அந்த நீரூற்றில் குளிப்பவர்களுக்கு உடல் நலம் பாதிக்கிறது. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக நீடிப்பதாக தெரிவிக்கும் அதிகாரிகள், அந்த கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை மூட திட்டமிட்டுவருவதாக தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், சுற்றுச்சூழலியலாளர்கள் வேறு மாதிரி யோசிக்கிறார்கள். அங்கு புதிதாக ஒரு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படுமானால், நதிநீர் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வறட்சி காலங்களில் பிரச்சினை ஏற்படலாம் என்று அவர்கள் கருதுகிறார்கள்.

அத்துடன், அந்த நீர் வீழ்ச்சியின் நீர் சுத்தமானது என்று தெரியவந்தால், மேலும் அதிக சுற்றுலாப்பயணிகள் வருவார்கள், அதனால் மேலும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்