பெண்ணைக் கொன்று கூறுபோட்டு சூட்கேசில் அடைத்த இளைஞர்: குடும்பத்தார் கூறும் காரணம்!

Report Print Balamanuvelan in சுவிற்சர்லாந்து

பெண் ஒருவரைக் கொன்று கூறு போட்டு சூட்கேசில் அடைத்த இளைஞரை மிகவும் நல்லவர் என்று கூறியுள்ளார்கள் அவரது குடும்பத்தினர்.

பாலியல் தொழிலாளியாகிய 50 வயது பெண் ஒருவரைக் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி, சூட்கேசில் அடைத்து, அந்த சூட்கேசை தனது வீட்டுக்கு கொண்டுவந்துள்ளார் 30 வயது நபர் ஒருவர்.

விசாரணையில், Freiburgஐச் சேர்ந்த அந்த இளைஞர், சம்பவம் நடக்கும்போது தான் உச்சகட்ட போதையிலிருந்ததாகவும், தனக்கு எதுவுமே நினைவில்லை என்றும் கூறியுள்ளார்.

அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் அவர் சிறுவயதில் மிக நல்லவராகவும் பிரபலமானவராகவும் இருந்தார் என்றும், சிறந்த கால்பந்து வீரராக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போதைக்கு அடிமையாகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அந்த பெண்ணின் உடலை அவர் தனது வீட்டுக்கு கொண்டுவந்தபோது, அதே வீட்டிலிருந்த மற்றொரு நபர் அதைக் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளிக்காததற்காக அவரும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்