7 வயது பிள்ளைக்கு கொரோனா தனிமைப்படுத்தலா? எதிர்ப்பு தெரிவித்த தந்தைக்கு சுவிஸில் கடும் சிக்கல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தில் கொரோனா தனிமைப்படுத்தலுக்கு தமது 7 வயது மகளை உட்படுத்த முடியாது என எதிர்ப்பு தெரிவித்த தந்தைக்கு பெடரல் அரசாங்கத்தால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிச் மண்டலத்தில் பாடசாலை ஒன்றில் ஆசிரியர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மாணாக்கர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை பாடசாலை நிர்வாகம் முன்வைத்துள்ளது.

ஆனால் பாடசாலை நிர்வாகத்தின் இந்த கோரிக்கையை 7 வயது மாணவி ஒருவரின் தந்தை கடுமையாக எதிர்த்துள்ளார்.

எனது பிஞ்சு மகளை ஒரு அறைக்குள் வைத்து வேளா வேளைக்கு உணவுடன் பூட்டி விடவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கூட தன்னைப் பொறுத்தமட்டில் சிறார் துஸ்பிரயோகமே என குறிப்பிட்டுள்ள அவர் தமது பிள்ளையை கண்டிப்பாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

ஆனால் தற்போதைய சூழலில் குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சட்டமே என தெரிவித்துள்ள பெடரல் நிர்வாகம்,, தனிமைப்படுத்தலுக்கு மறுத்தால் 10,000 பிராங்குகள் வரை அபராதம் செலுத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும், ராணுவமே வந்தாலும், தாம் தமது பிள்ளையை தனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்த முடியாது என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்