சுவிஸில் தொடர்ந்து இழிவாக பேசிய மனைவி: பொறுக்க முடியாமல் கணவன் செய்த கொடுஞ்செயல்

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் செயின்ட் கேலன் மண்டலத்தில் தொடர்ந்து தம்மை அவமானப்படுத்தி வந்த மனைவியை 66 வயதான நபர் அடித்தே கொன்ற சம்பவம் விசாரணைக்கு வந்துள்ளது.

கணவரால் கொல்லப்பட்ட அந்த பெண்மணிக்கு 60 வயது என தெரிய வந்துள்ளது.

தமது மனைவியை தண்டிக்க வேண்டும் என மட்டுமே எண்ணியதாகவும், கொலை செய்யும் எண்ணம் தமக்கு இல்லை எனவும் அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

தமது கணவனை குறித்த பெண்மணி தொடர்ந்து இழிவாக பேசி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

மோசமானவன், இழிவானவன், ஒரே பாலின ஈர்ப்பாளன் என அவர் அவமானப்படுத்தும்போதெல்லாம், இந்த நபர் அமைதியாகவே இருந்து வந்துள்ளார்.

சில வேளை குடியிருப்பில் இருந்து வெளியேறியும், பிரச்சனையில் இருந்து ஒதுங்கி இருந்துள்ளார்.

ஆனால் 2019 துக்க வெள்ளியன்று, பொறுக்க முடியாமல் அந்த நபர் தமது மனைவியை கடுமையாக திட்டியுள்ளார்.

மட்டுமின்றி இரும்பு தண்டால் தமது மனைவியை ஆத்திரம் அடங்கும் மட்டும் தாக்கியுள்ளார்.

பொலிஸ் விசாரணையில், அந்த பெண்மணியின் தலையில் 20 முதல் 30 முறை தாக்கியதாகவும், இதனால் ஏற்பட்ட காயத்தால் குறித்த பெண்மணி சம்பவயிடத்திலேயே மரணமடைந்ததாகவும் தெரிய வந்துள்ளது.

தொடர்ந்து பொலிசாரை அழைத்து நடந்தவற்றை ஒப்புவித்ததுடன், கைது செய்யவும் ஒத்துழைத்துள்ளார்.

செர்பியா நாட்டை பூர்வீகமாக கொண்ட அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது.

5 பிள்ளைகளுக்கு தாயாரான அவரின் விசித்திர குணம் கண்டு, தந்தைக்கு ஆதரவாகவே பிள்ளைகள் அனைவரும் இருந்துள்ளனர்.

தாயாரை விவாகரத்து செய்து கொள்ளவும் பிள்ளைகள் அனைவரும் தந்தைக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த அந்த நபர், அது தமது மனைவியின் வயதில் அவருக்கு அவமானமாகவும் அவருடைய குடும்ப மரபுக்கு முரணாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்