அல்கஹோல் டெலிவரி சேவையில் காலடி பதிக்கும் அமேஷான்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்

உலக அளவில் முன்னணி ஒன்லைன் வணிக சேவை வழங்குனர்களில் ஒருவராக விளங்கும் அமேஷான் நிறுவனம் மிகப்பெரிய வணிக சந்தையைக் கொண்ட இந்தியாவிலும் காலடி பதித்துள்ளமை தெரிந்ததே.

இப்படியிருக்கையில் அண்மையில் ஏற்பட்ட கொரோனா பரவல் காரணமாக மதுபானங்களை ஒன்லைன் ஊடாக விற்பனை செய்யக்கூடிய சாத்தியம் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் அமேஷான் நிறுவனம் அல்கஹோல் டெலிவரி சேவையினை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான சமிக்ஞையை காண்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சேவையானது முதலில் மேற்கு வங்காளப் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டு பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படும் என தெரிகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமை West Bengal State Beverages Corp ஆனது அம் மாநிலத்தில் ஒன்லைன் மதுபான டெலிவரி சேவையினை வழங்குவதற்கான அனுமதியை அமேஷான் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அலிபாபா மற்றும் பிக்பாஸ்கட் போன்ற நிறுவனங்களும் இதற்கான அனுமதியைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்