கூகுள் மேப் பாவித்தால் கொரோனா வைரஸிலிருந்து தப்பலாம்

Report Print Givitharan Givitharan in தொழில்நுட்பம்
22Shares

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உலக அளவில் மிகவும் அச்சுறுத்தலாக இருந்து கொரோனா வைரஸ் பரவல் பின்னர் சற்று குறைந்திருந்தது.

எனினும் தற்போது மீண்டும் உக்கிர நிலையை எட்டியுள்ளது.

இதன் காரணமாக விரைவாக தடுப்பு மருந்து கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் உலக நாடுகள் உள்ளன.

இப்படியிருக்கையில் தொழில்நுட்ப நிறுவனங்களும் தம்மால் ஆன உதவிகளை செய்வதற்கு முனைப்புக் காட்டி வருகின்றன.

இந்த வரிசையில் கூகுள் நிறுவனமும் தனது மேப் வசதி மூலம் பயனர்களுக்கு உதவி முன்வந்துள்ளது.

அதாவது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களை கூகுள் மேப்பில் சுட்டிக்காட்ட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாகக் கொண்டு பயனர்கள் குறித்த பிரதேசங்களில் பயணம் செய்வதை தவிர்க்க முடியும் அல்லது அவதானமாக செயற்பட முடியும்.

இவ் வசதியானது அன்ரோயிட் மற்றும் iOS சாதனங்களுக்கான கூகுள் மேப் அப்பிளிக்கேஷன்களில் தரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்