விம்பிள்டன் போட்டியில் நெய்மரை கலாய்த்த வீரர்: இணையத்தில் பரவும் வீடியோ

Report Print Arbin Arbin in ரெனிஸ்

விம்பிள்டன் போட்டியின் போது சிறிதாக காயம்பட்டதற்கு, கால்பந்து வீரர் நெய்மர் போலவே ஸ்வீடன் டென்னிஸ் வீரர் ஒருவர் செய்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது.

ரஷ்யாவில் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் கால்பந்து தொடரான ஃபிஃபாவின் இறுதி ஆட்டம் இன்று மாஸ்கோவில் நடைபெற உள்ளது.

ஃபிஃபா நடைபெற்ற ஒரு மாதமும் பல சுவாரஸ்யமான விசயங்கள் அரங்கேறின. கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோ (போர்ச்சுகல்) மற்றும் மெஸ்ஸி (அர்ஜெண்டினா) ஆகியோரின் அணிகள் ஒரே நாளில் யாரும் எதிர்பாராத வகையில் தோல்வியை தழுவின.

மட்டுமின்றி பிரேசில் அணியின் நட்சத்திர வீரரான நெய்மர் செய்த சுவாரஸ்யங்கள் தான் இணையத்தை கலக்கி வந்தன.

நாகவுட் போடியின் போது சிறிய காயத்துக்கே வலி தாங்கமுடியாமல் கதறுவது போல் நெய்மர் உருண்டு அழுதார். இதனால் அவர் சமூகவலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்.

பிரேசில் அணி உலகக் கிண்ணம் தொடரில் இருந்து வெளியேறியிருந்தாலும் நெய்மர் குறித்த செய்திகள் இன்னும் சமூகவலைதளங்களை விட்டு நீங்கவில்லை.

தற்போது லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற சீனியர் டபுல்ஸ் மூன்றாம் சுற்று போட்டியில் மன்சூர் பஹ்ராமி, கோரன் இவானிசேவிக், மற்றும் ஜோனஸ் பிஜோர்க்மன் மற்றும் டாட் வூட்பிரிட்ஜ் ஆகிய இணைகள் விளையாடிக்கொண்டிருந்தனர்.

இந்தப் போட்டியின் நடுவே டாட் வூட்பிரிட்ஜ் பந்தை அடிக்க அது எதிர்பாராத விதமாக ஜோனஸ் பிஜோர்க்மன் மீது விழுகிறது. அடுத்து ஒரு நிமிடம் யோசித்த ஜோனஸ் மைதானத்திலேயே சுருண்டு விழுந்து நெய்மர் உருண்டது போல் உருண்டார்.

பிறகு அவருக்கு உதவப் பிற வீரர்கள் முன்வந்தனர் அப்போது ஜோனஸ் சிரித்துக்கொண்டே எழுந்து தனது ஆட்டத்தைத் தொடங்க சென்றார். இந்த வீடியோ சமூகவைலைதளங்களில் வெளியாகி மிகவும் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்