முதல் முறையாக ஜப்பான் ஓபன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்திய ஜோகோவிச்! குவியும் பாராட்டு

Report Print Kabilan in ரெனிஸ்

ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில், செர்பிய வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

செர்பியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச், ஜப்பான் ஓபன் டென்னிஸ் தொடரில் அறிமுகம் ஆனார்.

அவுஸ்திரேலியாவின் ஜான் மில்மானை நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் எதிர்கொண்டார். பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில், ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மில்மானை வீழ்த்தினார்.

இதன்மூலம், 76வது முறையாக சர்வதேச சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். ஜப்பான் ஓபனில் அறிமுகம் ஆன முதல் ஆண்டிலேயே பட்டத்தை வென்று அவர் அசத்தியுள்ளார்.

வெற்றி பெற்ற ஜோகோவிச்சுக்கு இந்திய மதிப்பில் ரூ.2 கோடி பரிசுத்தொகையும், 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தன.

REUTERS/Kim Kyung-Hoon

இதேபோல் பீஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியில், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தன்னை எதிர்த்து விளையாடிய அவுஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லி பார்டியை வீழ்த்தி பட்டத்தை வென்றார்.

இது அவரது 5வது சர்வதேச பட்டமாகும். அவர் ரூ.10 கோடி பரிசுத்தொகையும், 1000 புள்ளிகளும் பெற்றார்.

Reuters

மேலும் ரெனிஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்