ரூ.7 கோடி நிதியுதவி பெற குழந்தைகளுக்கு போலியாக அறுவை சிகிச்சை செய்த தாய்

Report Print Peterson Peterson in பிரித்தானியா

பிரித்தானிய நாட்டில் அரசாங்க நிதியுதவி பெறுவதற்காக பெற்ற குழந்தைகளுக்கு போலியான அறுவை சிகிச்சை செய்த தாயாருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Croydon நகரில் பெயர் வெளியிடப்படாத தாயார் ஒருவர் தனது 6 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில், வறுமை மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் அரசாங்க நிதியுதவியான 3,75,000 பவுண்ட் (703,96,239 இலங்கை ரூபாய்) தொகையை பெற திட்டமிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து 6 பிள்ளைகளில் இருவர் ஊனமுற்றவராக நடிக்க அவர் பயிற்சி அளித்து வந்துள்ளார்.

இதன் அடிப்படையில், இருவருக்கும் ஆஸ்துமா மற்றும் மன இறுக்க நோய் இருப்பதாக தாயார் நாடகமாடியுள்ளார்.

பின்னர், குழந்தைகளுக்கு கட்டாயப்படுத்தி மருந்து மாத்திரைகளையும் கொடுத்து வந்துள்ளார். மேலும், பெண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வயிற்றில் நுகர்வு குழாய்களும் பொறுத்தப்பட்டது.

இந்த சிகிச்சைகளுக்காக அவர் 2002 முதல் 2013 வரை சுமார் 2,87,800 பவுண்ட் அரசாங்க நிதியுதவியை பெற்றுள்ளார்.

மேலும், எஞ்சிய தொகையினை பெற முயற்சி செய்தபோது அவரது நாடகம் அம்பலமாக கடந்த 2013ம் ஆண்டு தாயார் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்துள்ளது.

இந்நிலையில், இதன் இறுதி விசாரணை நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது, அரசாங்க நிதியுதவியை பெறுவதற்காக பெற்ற பிள்ளைகளுக்கு போலியான அறுவை சிகிச்சை செய்த தாயாருக்கு 7.6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments