பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன்

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
94Shares
94Shares
lankasrimarket.com

உலக மனநல ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு பர்க்கிங்ஹாம் அரண்மனையில் நடைபெற்ற நிகழ்வில் பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், கணவர் வில்லியம்ஸுடன் கலந்துக் கொண்டார்.

கேட், அரச குடும்பத்தின் மூன்றாவது வாரிசை சுமந்துக் கொண்டிருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் கலந்துக் கொள்ளும் முதல் பொது நிகழ்வு இதுவாகும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ஆம் திகதியிலிருந்து அரச கடமைகளிலிருந்து ஆறு வாரங்கள் ஓய்வு பெற்றிருந்த கேட், தற்போது மீண்டும் அரச பணிகளில் ஈடுபட தொடங்கியுள்ளார்.

குறித்த நிகழ்வில் கலந்துக் கொண்டிருந்த பிரித்தானிய இளவரசர் வில்லியம்ஸ், அவரது பாரியார் கேட் மிடில்டன் மற்றும் இளவரசம் ஹரி ஆகியோர் நகைச்சுவை நடிகர் ஸ்டீஃபன் ஃபிரை உள்ளிட்ட மனநல சுகாதார துறையின் முக்கிய நபர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்