பலுசிஸ்தான் விடுதலை தொடர்பாக பிரித்தானியா பேருந்துகளில் பிரசாரம்

Report Print Kabilan in பிரித்தானியா

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்திற்கு சுதந்திரம் தர வேண்டும் என லண்டனில் உள்ள பேருந்துகளில் பிரச்சார போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதற்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான், இங்கு செயல்பட்டு வரும் பிரிவினைவாத குழுக்கள், அந்நாட்டுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.

இதனால் அவர்களின் மீது ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இதனை எதிர்க்கும் விதமாக உலக பலூச் நிறுவனம் சார்பில், பலுசிஸ்தானுக்கு ஆதரவாக, லண்டனில் இம்மாத தொடக்கத்தில் பிரச்சாரம் தொடங்கப்பட்டது.

இதன்படி பலுசிஸ்தான் சுதந்திரம் தொடர்பான போஸ்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளில் இடம்பெற்றன.

அந்த போஸ்டர்களில், ‘பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் கொடுங்கள்’, ‘பலூச் மக்களைக் காப்பாற்றுங்கள்’ மற்றும் ‘பலூச் மக்கள் காணமல் போவதை தடுத்து நிறுத்துங்கள்’ என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

இதனால் அதிருப்தி அடைந்த பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தில் உள்ள பிரித்தானிய தூதரகத்திடம் புகார் செய்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த விளம்பரங்களை நீக்க உத்தரவிடுமாறு லண்டன் போக்குவரத்து துறைக்கு பிரித்தானிய வெளியுறத் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆனால், இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என பலூச் தலைவர்களும், WBO உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர், இதற்கு முன்னரும் இதேபோல பிரச்சாரம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்