லண்டனில் ஏராளமான சிறுவர்கள் மாயம்..வெளியான அதிர்ச்சி தகவல்: புகைப்படங்கள் வெளியீடு

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் கடந்த சில வாரங்களில் ஒன்பதிற்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணமல் போயுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Enfield பகுதியில் கடந்த சில வாரங்களில் மட்டும் 13 முதல் 17 வயதிருக்கும் 9 சிறுவர்கள் காணமல் போயுள்ளனர்.

இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி ஒவ்வொருவரும் எது போன்ற சூழ்நிலையில் இருந்த போது காணாமல் போயுள்ளனர் என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் காணமல் போன சிறுவர்களில் பெரும்பாலானோர் கருப்பு நிறம் உடையவர்கள் என தெரியவந்துள்ளது.

இது குறித்து காணமல் போன சிறுவன் Timothy Adeoye-யின் உறவினர் Adeoye(27) கூறுகையில், Timothy Adeoye கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் Enfield பகுதியில் காணாமல் போய்விட்டதாகவும், அவன் குறித்து புகைப்படம் வெளியிட்டுள்ளதாகவும் தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக தெரிவிக்கும் படி கூறியுள்ளார்.

திருவிழா நாட்களான கிறிஸ்துமஸ் தினம் நெருங்கும் சமயத்தில் சிறுவர்கள் காணமல் போயிருப்பது அவர்களின் பெற்றோர்களுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

காணமல் போயுள்ள சிறுவர்களில் சிலரின் புகைப்படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்