பிரித்தானிய ராணி எலிசபெத்தை சந்திக்க உள்ள நரேந்திர மோடி

Report Print Kabilan in பிரித்தானியா

ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுவீடன் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரித்தானியா சென்றடைந்துள்ளார்.

பிரித்தானியாவுக்கு சென்றுள்ள மோடிக்கு, லண்டன் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் பிரித்தானிய பிரதமர் தெரசா மேயை சந்திக்க உள்ளார், இதனைத் தொடர்ந்து இன்றுமுதல் வரும் 20ஆம் திகதி வரை லண்டனில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்.

இம்மாநாட்டில் இரு நாடுகளுக்கிடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, லண்டனில் அறிவியல் அருங்காட்சியகத்தில் நடைபெறும் கண்காட்சியை பார்வையிடும் மோடி, பக்கிங்ஹாம் அரண்மனையில் பிரித்தானிய ராணி எலிசபெத்தை சந்திக்க உள்ளார்.

20ஆம் திகதி பிரித்தானிய பயணத்தை முடித்துக் கொள்ளும் மோடி, அதனைத் தொடர்ந்து ஜேர்மனிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

காமன்வெல்த் தலைவர்களில் தன்னை தனிப்பட்ட முறையில் சந்திக்க, மோடி உட்பட 3 பேரை மட்டுமே ராணி எலிசபெத் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PMO/Twitter

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்